முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது தி.மலையில் நடந்த மே தின கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவபதி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சியை பிடித்து விடலாம் என நினைக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது என திருவண்ணாமலையில் நடந்த மே தினவிழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசினார். திருவண்ணாமலையில் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மேதினவிழா பொதுக்கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டம்

இந்த கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.கோவிந்தராஜ் தலைமை தாங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க தி.மலை மண்டல செயலாளர் டி.மனோகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். தலைவர் டி.திருமேனி, இணை செயலாளர்கள் போர்மன்னன் (எ) ராஜா, எம்.அண்ணாமலை, மாவட்ட டாஸ்மாக் செயலாளர் சி.தனபால், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில இளைஞரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி பேசுகையில், மே தின விழாவை கொண்டாட அதிமுகவுக்கு மட்டுமே தகுதி உள்ளது தமிழகத்தில் தொழிறசங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்கியவர் எம்ஜிஆர் அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதா தொழிலாளர்கள் நலன் கருதி சேவை நிதியை ரூ. 1 லட்சமாக உயர்த்தினார் எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு இரண்டாக பிளவுபட்ட அதிமுக ஒன்றாக இணைத்து ஒரு மாபெரும் சக்தியாக உருவாக்கி இந்தியாவில் 3வது பிரதான கட்சியாக உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா மறைவுக்குபிறகு அவரால் அடையாளம் காட்டப்பட்டு பதவி சுகங்களை அனுபவித்த சில துரோகிகள் கட்சியை பிளவுபடுத்த செயல்பட்டு வருகின்றனர்.

அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைக்கும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது தொடர்ந்து பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்திவரும் இந்த ஆட்சியில் தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் அதிமுக ஆட்சியே தொடர்ந்து 4 ஆண்டுகள் தொடர வேண்டும் விரும்புகிறார்கள். இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து ஜெயலலிதா வழிகாட்டுதலின்பேரில் கட்சியை வலுப்படுத்தி ஆட்சியே தொடரும் என்றார் கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் பி.அன்பழகன், இணை செயலாளர் எம்.நளினி மனோகரன், தலைமை கழக பேச்சாளர் ஏ.அமுதா அருணாச்சலம், மாவட்ட கழக பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம், நகர கழக செயலாளர் ஜெ.செல்வம், முன்னாள் அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் பி.உத்தண்டி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.ஜீவா, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மின்சார பிரிவு வட்ட செயலாளர் என்.துரை நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்