முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க கூட்டுப் படையில் குழப்பம்: சிரியாவில் துருக்கிக்கு எதிராக அமெரிக்க படைகள் குவிப்பு

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      உலகம்
Image Unavailable

டாமாஸ்கஸ்  - சிரியா அதிபர் ஆசாத், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் அமெரிக்க கூட்டுப் படைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு துருக்கிக்கு எதிராக அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளன.  நேட்டோ எனப்படும் அமெரிக்க கூட்டுப்படையில் துருக்கியும் அங்கம் வகிக்கிறது. சிரியாவில் அதிபர் ஆசாத் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் துருக்கியும் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரியாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் குர்து இன மக்களும் வசிக்கின்றனர். அவர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் துருக்கி ராணுவத்தை பொறுத்தவரை குர்து இன மக்கள் அனைவரும் தீவிரவாதிகள். அந்த வகையில் சிரியாவின் கராசக் மலைப் பகுதி, வடக்கு இராக்கின் சின்ஜார் மலைப் பகுதியில் துருக்கி போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன. இதில் குர்து ஜனநாயக படையைச் சேர்ந்த 25 வீரர்கள் பலியாகினர்.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குர்து இன மக்களின் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் அதிநவீன டாங்கிகள் கராசக், சின்ஜார் மலைப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க படைகள் துருக்கி ராணுவத்தை கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. நேட்டோ படையில் அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கூட்டுப் படையில் பெரும் குழப்பத்துக்கு வித்திட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago