முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்டு டிரம்ப் - புதின் அவசர ஆலோசனை

புதன்கிழமை, 3 மே 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினும் டெலிபோனில் திடீரென பேசினர். அப்போது சிரியா போரை முடிவுக்கு கொண்டுவர ஆலோசனை நடத்தினார்கள்.

தீடீர் ஆலோசனை
புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் ரஷ்யாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்புறவுடன் உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அடிக்கடி டெலிபோனில் பேசி உலக நடப்புகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் திடீரென டெலிபோனில் பேசிக் கொண்டனர். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியா போர் ...
இரு தலைவர்களும் பேசும் போது மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து ஆலோசித்தனர். நீண்ட நாட்களாக உள் நாட்டு போரினால் சிரியா அவதிப்பட்டு வருகிறது. மக்கள் சொல்லெண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே அந்த நாட்டில் நடைபெறும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனை குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள கடும் ஆபத்து குறித்தும் இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

மூன்று முறை ...
வருகிற ஜூலை மாதம் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. அப்போது இருவரும் நேரில் சந்தித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அவருடன் ரஷ்ய அதிபர் புதின் இதுவரை 3 தடவை டெலிபோனில் பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்