முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயங்கி கிடந்த மூதாட்டியை மனிதநேயத்துடன் செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்பு பொதுமக்கள் பாரட்டு!!

புதன்கிழமை, 3 மே 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே மயங்கிக் கிடந்த 80வயது மூதாட்டியை செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்டு அவரை பத்திரமாய் வீட்டில் கொண்டு போய் சேர்த்த மனிதநேய சம்பவத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் புறநகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள கூளையாபுரம் இரண்டாவது தெரு பகுதியில் சுமார் 80வயது மதிக்கத்தக்க மூதாட்டியொருவர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் திருமங்கலம் கிளை செஞ்சிலுவை சங்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து திருமங்கலம் செஞ்சிலுவை சங்க துணைத் தலைவர் சாலமன்,முதலுதவி பணியாளர் குமரவேல் ஆகியோர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து வந்து மயங்கிக் கிடந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கினார்கள்.பின்னர் மயக்கம் தெளித்த மூதாட்டியை விசாரித்தபோது அவர் விளாச்சேரி சீனிவாசா காலனி பகுதியில் வசித்திடும் ரகமத்(80)என்பது தெரியவந்தது.
முதியோர் ஓய்வூதிய தொகையில் வாழ்க்கை நடத்திடும் இந்த மூதாட்டி கடந்த 3நாட்களுக்கு முன்பாக திருமங்கலம் நகர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுவிட்டு உதவிக்கு யாரும் இல்லாததாலும் முதுமையின் காரணமாகவும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாமல் தவித்து வெயிலின் கொடுமையால் மயங்கி விழுந்ததாக தெரிவித்தார்.இதையடுத்து திருமங்கலம் செஞ்சிலுவை சங்க துணைத் தலைவர் சாலமன்,முதலுதவி பணியாளர் குமரவேல் ஆகியோர் மூதாட்டி ரகமத்தை ஆட்டோவில் ஏற்றிச் சென்று மதுரை விளாச்சேரி அருகிலுள்ள சீனிவாசா காலனியிலிருக்கும் அவரது வீட்டில் சேர்த்துவிட்டு திருமங்கலம் திரும்பினார்கள்.வெயிலின் கொடுமையால் வீதியில் மயங்கிக் கிடந்த மூதாட்டியை திருமங்கலம் செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்டு அவரது வீட்டில் கொண்டு போய் பத்திரமாக சேர்த்த மனிதநேய சம்பவத்தை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்