முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 100 சதவீதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணிகள் ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

புதன்கிழமை, 3 மே 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 100சதவீதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் தினம்

 மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோயம்புத்தூர் மாநகராட்சியில் வரும் ஜுன் மாதம் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட உள்ளதால் மாநகராட்சி பகுதிகளில் 100சதவீதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணி நடைபெற வேண்டும் என்ற குறிக்கோள்  வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பகுதியில்

அதன் ஒருபகுதியாக இன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் 100சதவீதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் 100சதவீதம் குப்பைகளை தரம் பிரிக்க தேவையான உபகரணங்கள், வாகனம், பெட்டிகள் மற்றும் ஆட்கள் ஆகியவை போதிய அளவில் உள்ளனவா அல்லது பற்றாக்குறை உள்ள வார்டுகள் தங்கள் தேவைகளை தெரிவித்து செயல்திட்டம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்காண் அனைத்து தேவைகளை நிவர்த்தி செய்து 100சதவீதம் குப்பை தரம் பிரித்து வழங்கும் பணி மேற்கொள்ளவும் அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், பொறியாளர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்கள் - ஆகியோர் ஒருங்கிணைந்து பணிபுரிந்து செயல்திட்டம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி  அலுவலர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன்   தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ப.காந்திமதி , நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்