முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சீராக வழங்குவதற்காக மாற்று ஏற்பாடுகள் அமைச்சர்கள் ஆய்வு

புதன்கிழமை, 3 மே 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சீராக வழங்குவதற்காக மாற்று ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் ஆணையாளர் சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ  வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர்.
 மதுரை மாநகராட்சி 2011 ஆம் ஆண்டு முதல் 51.82 சதுர கிலோ மீட்டரிலிருந்து 147.997 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட மதுரை மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 17 லட்சமாகும். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுப் பகுதிகளில் வைகை அணை, வைகை ஆற்றுப்படுகை நீர் ஆதாரங்கள், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் மூலம் 94 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது வைகை அணையின் நீர்இருப்பு 139 மில்லியன் கன அடியாக உள்ளது. இவற்றில் 59 மி;ல்லியன் கனஅடி மட்டுமே உபயோகம் செய்யப்படும் நிலையில் உள்ளது. தற்போது மேற்படி ஆதாரங்களின் மூலம் 94 மி;ல்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் பழைய 72 வார்டு பகுதிகளுக்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 65 லிட்டர் குடிநீரும், புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளுக்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை  பெய்யாத காரணத்தினாலும், வைகை அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகின்ற காரணத்தினாலும் மதுரை மாநகருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்யும் விதமாக மாற்று ஏற்பாடாக வறட்சி நிவாரண பணி மூலம் புதிதாக 500 ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் 25 மில்லியன் லிட்டர் தண்ணீரும், தனியாருக்கு சொந்தமான விவசாய கிணறுகளின் மூலம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரும் மற்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு வறட்சி நிவாரண நிதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் மூலம் 20 மில்லியன் லிட்டர் தண்ணீரும், மணலூர் மற்றும் திருப்புவனம் நீரேற்று நிலையங்களின் மூலம் 5 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சேர்த்து மொத்தம் நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் அதாவது ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.
மேற்கண்ட வறட்சி நிவாரண பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.10 கோடியும் மற்றும் அபிவிருத்தி இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியும் என மொத்தம் ரூ.13 கோடி அரசின் மானியமாக பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 215 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. 35 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் 270 குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் வாங்கப்பட்டு வார்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.தனியார் டிராக்டர்கள், டேங்கர் லாரிகள் என 153 வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 20 இடங்களில் 8 விட்டமுள்ள ஆழ்துளை கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டு அவற்றில் 7 இடங்களில் பணிகள் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் மேலக்கால் மற்றும் கோச்சடை பகுதிகளில் நீர் உறிஞ்சும் கிணறுகள் மற்றும் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் மே 31 க்குள் முடிக்கப்படும்.
கூடுதலாக தேவையான இடங்களுக்கு புதிதாக குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் வாங்கவும், வார்டுப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ.7 கோடி வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் மானியமாக பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்குவதை கண்காணிக்க 57 தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்;. மாநகராட்சி லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரையும் தனியார் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரும் பரிசோதனை செய்வதற்கு மாநகராட்சியின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  எனவே வறட்சிக்காலத்தில் குடிநீர்பற்றாக்குறையினை சமாளிக்கும் வகையில் மதுரை மாநகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் விதமாக மாற்று ஏற்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ்,  ஆணையாளர் சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, ஏ.கே.போஸ், துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், உதவி ஆணையாளர்கள் அரசு, பழனிச்சாமி, செல்லப்பா, திருமதி.கௌசலாம்பிகை, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், சந்திரசேகரன், சேகர், உதவிப் செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்