முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டாய ஹெல்மெட் திட்டத்தை கண்டித்து சாலைமறியல் அன்பழகன் எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது

வியாழக்கிழமை, 4 மே 2017      புதுச்சேரி
Image Unavailable

கட்டாய ஹெல்மெடட திட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏ அன்பழகன் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

 சட்டம் அமல்

 புதுவையில் கடந்த 1-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே அதிமுக சார்பில் அன்பழகன் எம்எல்ஏ கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஹெல்மெட்டிற்கு எதிர்ப்பு

இந்த நிலையில் அதிமுகவினர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் அண்ணா சிலை அருகே  நேற்று காலை ஒன்று திரண்டனர். அங்கு கட்டாய ஹெலமெட் திட்டத்தை பொதுமக்கள் மீது திணிக்காதே என்றும், ஹெல்மெட் திட்டத்தை வாபஸ் வாங்க கோரியும் கோஷமிட்டனர். பின்னர் கையில் எடுத்து வந்திருந்த 5 ஹெல்மெட்டுகளை ரோட்டில் போட்டு உடைத்தனர்.

சாலை மறியல்

பின்னர் சாலையில்அமர்ந்து மறியல் செய்தனர். இந்த போராட்டத்தில் அதிமுக நகர செயலாளர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், பொருளாளர் சுத்துக்கேணி பாஸ்கர், இணை செயலாளர் பன்னீர்செல்வி, துணை செயலாளர்கள்  கணேசன், நாகமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாலயா இளங்கோ,வீரம்மாள், தொகுதி செயலாளர்கள் செந்தில்முருகன், நாராயணன்,கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், விமலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்பழகன் எம்எல்ஏ உள்ளிட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்