முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி கட்டணம் அறிவித்த பிறகு மருத்துவ படிப்பிற்கு சென்டாக் கலந்தாய்வு நடத்த வேண்டும் பெற்றோர் மாணவர் சங்கம் கோரிக்கை

வியாழக்கிழமை, 4 மே 2017      புதுச்சேரி

புதுவை மாநில அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் நலச் சங்கத் தலைவர் நாராயணசாமி,பொருளாளர் விசிசி நாகராஜன் ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்று வெளியிட்டுள்ளனர். அதில்  கூறியிருப்பதாவது:-

 50 சதவீத இடஒதுக்கீடு

மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தனியார், நிகர்நிலை, சிறுபான்மையின மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும எனறு கொள்கை முடிவு எடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில் புதுவையில் முதன்முறையாக மருத்துவ கல்லூரிகள் அனைத்திலிமிருந்து 52 பல் மருத்துவ இடங்களில் அரசு ஒதுக்கீடான 27 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.

புறக்கணிப்பு

ஆனால் கல்லூரிகளின் கல்வி கட்டணம்அறிவிக்கப்படவில்லை. இதனால் அதிகளவில் மாணவர்கள் சென்டாக்கில்  கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். எனவே புதுவை அரசு உடனடியயாக கல்வி கட்டணத்தை அறிவித்த பிறகு எம்பிபிஎஸ்., எம்எஸ் போன்ற படிப்புகளில் 290 இடங்களில் 146 இடமான அரசு இட ஒதுக்கீட்டிற்கு இடங்களை நிரப்ப சென்டாக் கலந்தாய்வு நடத்த வேண்டும். இல்லையென்றால் புதுவை அரசு போராடி பெற்ற 50 சதவீத இடங்கள் ஏழை-எளிய புதுவை மாணவர்களுக்கு பயனில்லாமல் போகும்.

கண்துடைப்பு

மேலும் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள மேல்நிலை மருத்துவ படிப்பிற்கு எத்தனை மாணவர்கள் விண்ணப்பித்துள்னர்? என்ற பட்டியலுடன் அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் அரசு கலந்தாய்வு நடத்தினால் கண்துடைப்பாகத் தான் இருக்கும். ஏனெனில் சென்ற ஆண்டு எம்பிபிஎஸ், நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் அதிக கல்வி கட்டணம் கல்லூரிகள் கேட்டதால் புதுவை மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற வெளிமாநில மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி கல்லூரியில் சேர்ந்ததால் அதிக மதிப்பெண்கள் எடுத்த தகுதியான புதுவை மாணவர்கள் பாதிக்கப்படடது போன்றுதான் இப்போதும் இருக்கும். இவ்வாறு  அதில் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்