கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 4 மே 2017      கோவை
Photo - 1 (04 05 2017)

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம்

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  தெரிவிக்கையில் “ நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்களால் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும் நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது திங்கள் முதல் வெள்ளி வரை, அதாவது  திங்கட்கிழமை அன்று மத்திய மண்டலத்திற்கும், செவ்வாய் கிழமை அன்று கிழக்கு மண்டலத்திற்கும், புதன் கிழமை அன்று மேற்கு மண்டலத்திற்கும், வியாழக்கிழமை அன்று தெற்கு மண்டலத்திற்கும், வெள்ளிக் கிழமை அன்று வடக்கு மண்டலத்திற்கும் நாள்தோறும் அந்தந்த வார்டுகளுக்குச் சென்று பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை குறைதீர்ககும் பெட்டியில் போடப்பட்டு, அம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை

இந்த நடமாடும் மக்கள் குறைதீர்க்கும் வாகனமானது தொடர்ந்து நாள் தோறும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனி அலுவலர் தலமையில்

மேலும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாதத்தின் முதல் வாரம் மட்டும் மேற்கண்ட ஐந்து மண்டலங்களின் அலுவலகத்திற்கு மாலை 4.30 மணியளவில், அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை மாநகராட்சி ஆனையாளர்ஃதனி அலுவலரிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தெற்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களாக தெரு விளக்குகள், குப்பைகளை அகற்றுதல், குடிநீர் குறைபாடு, சாக்கடை தூர்வாறுதல், சாலைகள் சீரமைக்கும் பணிகள் என பல்வேறு உதவிகள் கோரி 10 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்ட்டது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  தெரிவித்தார். இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.காந்திமதி , மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.எம்.திவாகர், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: