முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் நிலம் கையகம் செய்யப்பட்டதற்கு இழப்பீடு தொகை நிர்ணயம் செய்தல் தொடர்பான குழுக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 4 மே 2017      விழுப்புரம்
Image Unavailable

 

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் - வெங்கடேசபுரம் இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவு எண்-2க்கு மாற்றாக பழைய தேசிய நெடுஞ்சாலை 45 கி.மீ. 1588ல் சாலை மேம்பாலம் அமைக்க தனியார் நிலம் கையகம் செய்யப்பட்டதற்கு இழப்பீடு தொகை நிர்ணயம் செய்தல் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை குழுக் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,தலைமையில் நடைபெற்றது

நேரடி பேச்சுவார்த்தை

 விழுப்புரம் வட்டம் மற்றும் நகரத்தில் விழுப்புரம் பழைய தேசிய நெடுஞ்சாலை எண்.45-ல் விழுப்புரம் - வெங்கடேசபுரம் இரயில்வே நிலையங்களுக்கு இடையேயுள்ள இரயில்வே கடவு எண்-2 (டுiநெ ஊசழளளiபெ ழே.2)க்கு மாற்றாக சாலை மேம்பாலம் அமைப்பதற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டம் 2001ன் பிரிவு 15(1) கீழான படிவம்-சியிலான அறிவிப்பு மாநில அரசிதழில் வெளியிடப்படுவதை எதிர்நோக்கி மேற்படி சட்டப் பிரிவு19(1) மற்றும் 19(2)ன் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வரையறை செய்யப்பட்டுள்ள அதிகாரத்தின்படி கையகப் பரப்பிற்கு நேரிடை புரிந்துணர்வின் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்திடுவதற்கு மாவட்ட நேரடி பேச்சுவார்த்தை குழு தலைவர் கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் இல.சுப்பிரமணியன்,அவர்களால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பலர் பங்கேற்பு

 இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், கடலூர் பத்திரப்பதிவுத்துறை துணை தலைமை பதிவாளர் முகமத் ஜாபர் சாதிக், கடலூர் கோட்டப்பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள் பன்னீர்செல்வம், உதவி பொறியாளர் புனிதா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பத்ரிநாத், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜேந்திரன், விழுப்புரம் மாவட்டப் பதிவாளர் குமரேசன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் பத்மா, விழுப்புரம் பதிவுத்துறை சார்பதிவாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் சார்பாக 42 நபர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பெரும்பான்மையான நில உரிமைதாரர்கள் தங்களது நிலத்தினை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அரசு நிர்ணயம் செய்திடும் இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக் கொண்டு மேம்பாலப் பணிக்கு அளித்திட இசைவு தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்