முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் : மாநில தேர்தல் ஆணையர் மாலிக்பெரோஸ்கான் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 4 மே 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் 2017ம் ஆண்டு உள்ளாட்சி சாதாரணத் தேர்தலுக்கான ஆய்வுக் கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக்பெரோஸ்கான். தலைமையில் நடைபெற்றது.

 உள்ளாட்சி தேர்தல்

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக்பெரோஸ்கான். அவர்களிடம் எடுத்துரைத்தார்.ஆய்வுக் கூட்டத்திற்கு பின் மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக்பெரோஸ்கான். செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று(04.05.2017) நடைபெற்றது. 05.01.2017 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வார்டு வாரியாக தயாரிப்பு குறித்து மூன்று மாவட்ட வளர்ச்சித் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்குச்சாவடி பட்டியல் மாற்றம், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர் குறித்த விவரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலுக்கான அடிப்படை பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் இம்மாத இறுதிக்குள்(மே – 2017) நிறைவடையும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற பகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளரின் முன்வைப்புத் தொகை அளவு குறைவாக இருப்பதால் அவர்களுக்கு தகவல் தெரிவித்து திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பாதுகாப்பு அறையில் வாக்குசாவடிகளுக்கு தேர்தல் தொடர்பான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதை மாநில் தேர்தல் ஆணையர் எம்.மாலிக்பெரோஸ்கான். பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) மோகன் மற்றும் திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago