தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு ஈரோடு மாவட்ட விவசாயிகள் குழு சந்திப்பு

வியாழக்கிழமை, 4 மே 2017      ஈரோடு
IMG 0237

தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு ஈரோடு மாவட்ட விவசாயிகள் குழு சந்தித்தனர்.

கடன் தள்ளுபடி

தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு புதுடெல்லியில் 41 நாட்கள் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, விளைபொருளுக்கு விலை நிர்ணயம், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
 போராட்டத்தை வருகிற 25ம் தேதி வரை ஒத்திவைத்து திருச்சி வந்துள்ளனர். 41 நாள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தொடர்ந்து போராடியமைக்கு நன்றி தெரிவித்தும், இனிவரும் காலங்களில நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் குழு நேரில் சந்தித்தனர்.

குழுவில் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பொ.காசியண்ணன், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் கி.வடிவேலு, மாவட்ட உழவர் விவாத குழு செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி, மஞ்சள் விவசாயிகள் சங்க செயலாளர் எஸ்.ஏ.பெருமாள் பட்டுகூடு  உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கே.கே.குணசேகரன், யு10 பாசன சபை செயலாளர் எஸ்.எம்.சுப்ரமணியம், டி.சி.வாசு, கள்ளிப்பட்டி கே.பி.கோதண்டன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.  வருகிற 16ம் தேதி கோபியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் பேச உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: