முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் நீச்சல் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் : மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமசுப்பிரமணியராஜா தகவல்

வியாழக்கிழமை, 4 மே 2017      பெரம்பலூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைத்துள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நீச்சல் வகுப்புகள் இன்று முதல் நடத்தப்பட உள்ளது.

 நீச்சல்பயிற்சி

இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 05.05.2017 முதல் 18.05.2017 வரையிலும், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 19.05.2017 முதல் 01.06.2017 மணி வரை காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, 8.00 மணி முதல் 9.00 மணி வரை. மற்றும் மாலை ; 3.00 மணி முதல் 4 மணி வரை, 4.00 மணி முதல் 5.00 மணி வரை, 5.00 மணி முதல் 6.00 மணி வரை, 6.00 மணி முதல் 7.00 மணி வரை ஆகிய நேரங்களில் பிரதி திங்கள் கிழமை தவிர அனைத்து நாட்களும் நடத்தப்பட உள்ளது. காலை, மாலை இருவேளையும் சிறந்த நீச்சல் பயிற்றுநரை கொண்டு 12 நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

12 வகுப்புகளில் அடிப்படை நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுத்தரப்படும். எனவே கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று பயன்பெறவும், உடல் திறனை மேம்படுத்தி சிறந்த நீச்சல் வீரர்ஃவீராங்கனைகளாக உருவாகவும், தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறவும்,; பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும் இதுகுறித்த தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 8220999499 என்ற எண்ணிலும், நீச்சல் பயிற்றுநரை 9965639606, 8220113260 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago