முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணிகள் மற்றும் பேரூராட்சிகள் வளர்ச்சிப் பணிகள் செய்தியாளர்களுடன் சென்று கலெக்டர் மு.கருணாகரன் ஆய்வு

வியாழக்கிழமை, 4 மே 2017      திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து  பார்வையிட கலெக்டர்  மு.கருணாகரன், தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

 வளர்ச்சிப் பணிகள் குறித்து

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் தாமிரபரணி ஆற்றில் குடிநீர் வடிகால் வாரியம் பராமரிப்புக் கோட்டத்தின் மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறு (சம்ப்) மேலக்கல்லூர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில், மானூர் மற்றும் பாளையங்கோட்டை ஒன்றியத்தை சார்ந்த 170 ஊரக குடியிருப்புக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், முக்கூடல் பேரூராட்சி பேரூந்து நிலையத்தில் ரூ.90 இலட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள், சேரன்மகாதேவி  அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.2.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகள் ஆகியவைகளை கலெக்டர்  செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.பின்னர் கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

7859 பணிகள் நிறைவு

திருநெல்வேலி மாவட்டத்தில் பேரூராட்சிகளின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செய்யப்பட்டு வரும் பணிகள் பார்வையிடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 36 பேரூராட்சிகளில் 2016-2017-ம் ஆண்டில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் அபிவிருத்தி திட்டத்தில் 15 பணிகள் ரூ.13.80 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.11.32 கோடி மதிப்பில் 9427 தனி நபர் இல்ல கழிப்பிடம் கட்டும் பணிகளில் 7859 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் திட்ட பணிகள்

குடிநீர் வடிகால் வாரியம் நகரக் கோட்டத்தின் மூலம் மானூர் மற்றும் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த 170 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.32.40 கோடி செலவில் தாமிரபரணி ஆற்றில் மேலக்கல்லூர் பகுதியில் உறிஞ்சு கிணறு அமைத்து நீர் சேகரித்து 31 தரைமட்டத் தொட்டிகள் 31 மேல்நிலைத்தொட்டிகள் அமைத்து 135570 மக்களுக்கு குடி நீர் வழங்கும் திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறத. ஜுன் 2017 பணிகள் முடிக்கப்படும். தமிழ்நாடு  குடிநீர் வடிகால் வாரியம் திருநெல்வேலி பராமரிப்புக் கோட்டத்தின் மூலம் புணரமைப்புத்திட்டத்தின் மூலம் 20 பணிகள் ரூ.184.20 இலட்சத்திலும், பேரிடர் நிவாரண  திட்டத்தில் 59 பணிகள் 332.93 இலட்சத்திலும் வறட்சி நிவாரண திட்டத்தின்கீழ் பணிகள் 148 பணிகள் ரூ.111.95 இலட்சத்திலும் என மொத்தம் 227 பணிகள் 629.08 இலட்சம் மதிப்பில்  செய்து முடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும், புதிய குடிநீர் திட்டப்பணிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வின் போது சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விஷ்ணு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் (நகரம்)  நாராயணன், (பராமரிப்பு) பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு  அலுவலர்(மு.கூபொ.) வெ.சீனிவாசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர்  ஜோதி முருகன்,  வாசுதேவன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியம்,  முகமது அலி ஜின்னா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்