முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உளுந்தூர்பேட்டை வட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் விநியோகப் பணிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 5 மே 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டப் பகுதிகளில் வறட்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் குடிநீர் விநியோக திட்டப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்  ஆய்வு செய்தார்.

 நிதி ஒதுக்கீடு

உளுந்துபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்பியன்மாதேவி, புதிய காலனி, மற்றும்  பழைய காலனி, பு.கிள்ளனூர், புல்லூர், சாத்தனூர், பாலி, திருப்பெயர், புத்தமங்கலம், ஏ.குமாரமங்கலம், ஆர்.ஆர்.குப்பம், தானம், மூலசமுத்திரம், எறையூர், தேன்குணம், எல்லைகிராமம், காட்டுச்செல்லூர், எம்.குன்னத்தூர், சிக்காடு, பூண்டி, பு.கொணலவாடி, நெடுமானூர், வெள்ளையூர், பிடாகம், குணமங்கலம், நெய்வனை, எதலவாடி, கீழ்ப்பாளையம், தாமல், கிளியூர், ஏமம், சிறுபாக்கம், கூத்தனூர், புகைப்பட்டி, குஞ்சரம், காட்டுஎடையார், எ.கொளத்தூர், அதையூர், வடமாம்பாக்கம், எஸ்.மலையனூர், பல்லவாடி, பின்னல்வாடி, நத்தாமூர் ஆகிய கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சீர்செய்ய, 2017-18ஆம் ஆண்டு பொது நிதி திட்டத்திலிருந்து, ரூ.1 கோடியே 59 லட்சத்து 78 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அலுவலர்களுடன் ஆலோசனை

இத்திட்டத்தின்கீழ், திறந்தவெளிக் கிணற்றிலிருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பைப்லைன் அமைத்தல், குடிநீர் விநியோகம் செய்தல், மாற்று ஆழ்துளை கிணறுகள் மற்றும் புதிய போர்வெல் மின்மோட்டார் பொருத்துதல், பைப்லைன்களை விரிவாக்கம் செய்தல் மற்றும் மாற்றியமைத்தல், திறந்தவெளிக் கிணறுகளை ஆழப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு, கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை போக்க மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளை துரிதப்படுத்த கலெக்டர் இல.சுப்பிரமணியன்  சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வு

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பாலி கிராமத்தில் திறந்தவெளிக் கிணற்றிலிருந்து, புதிய மின் மோட்டார் பொருத்தி, நீர்ஏற்றக் குழாயின் மூலம் புதிய காலனியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும், திருப்பெயர் ஊராட்சி தக்கா கிராமத்தில் திறந்தவெளிக் கிணற்றை ஆழப்படுத்தும் பணியினையும் கலெக்டர் இல.சுப்பிரமணியன்  பார்வையிட்டு,  ஆய்வு செய்தார்.மேலும், நாம் இத்தருணத்தில் அனைவருக்கும் தடையின்றி குடிநீர் வழங்கிட வேண்டியுள்ளதால், தனி நபர் எவரேனும் மோட்டார் வைத்து பொது குடிநீர் குழாய்களில் தண்ணீர் உறிஞ்சுதல், தோட்டப் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், பள்ளங்கள் தோண்டி தண்ணீர் பிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால்  மீது காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இவ்வாய்வின்போது, உதவி செயற்பொறியாளர் மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமால், ஆறுமுகம், ஒன்றியப் பொறியாளர்கள் முகமதுநஜீப், ரங்கபாஷியம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago