நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வறட்சி நிவாரணப் பணிகளுக்கு ரூ.109.48 கோடி ஒதுக்கீடு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பணி ஆய்வுக் கூட்டத்தில் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 5 மே 2017      கோவை
11

மதுரை, திண்டுக்கல் மாநகராட்சிகள்,  மதுரை மண்டலத்திற்குட்பட்ட  நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் வறட்சி நிவாரணப் பணிகளுக்கு ரூ.109.48 கோடி  ஒதுக்கீடு  -    நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி   பணி ஆய்வுக் கூட்டத்தில் அறிவிப்பு

ஆய்வுக் கூட்டம்

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்  மற்றும்   கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  ஆகியோரின் தலைமையில்,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்                    எஸ்.பி.வேலுமணி   மதுரை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகள்,  மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும்  ஊரக உள்ளாட்சி  அமைப்புகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

142 வருடங்களில்

இந்த ஆய்வுக்கூட்டத்தில்,   நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர்  தமிழகத்தில் கடந்த 142 வருடங்களில், எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம், பருவமழை பொய்த்துவிட்டதாலும், வடகிழக்கு பருவமழை சராசரியைக் காட்டிலும் 62 சதவீகிதம் குறைவாக பெய்துள்ள நிலையில், நகர்ப்புர மற்றும் ஊரகப் பகுதிகளில் தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் இயன்ற அளவிற்கு  வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

ரூ.1032.60 கோடி நித ஒதுக்கீடு

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு, நகர்ப்புரம் மற்றும்  ஊரகப் பகுதிகளில்  குடிநீர் தட்டுப்பாட்டினை சமாளிக்க இதுவரை  ரூ.1032.60 கோடி  நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.   மேலும்,  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ள மாநில நிதிக் குழு மானியத் தொகை  ரூ. 231.96 கோடியினை  குடிநீர் திட்டப்  பணிகளுக்கு  முன்னுரிமை அளிக்க    அமைச்சர்  ஊரக வளர்ச்சி அலுவலர்களுக்கு  அறிவுரை வழங்கினார். 

110-ன் கீழ் அறிக்கப்பட்ட

ஏற்கெனவே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு தற்போது நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும் என்றும், நடப்பாண்டில் அனைத்து திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளையும் உரியகாலத்திற்குள் முடிக்கும் வண்ணம் விரைவாக செயலாற்ற வேண்டும் என்றும்  அமைச்சர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும்,  தமிழக முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், மேதகு அளுநரின் உரையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள், மானியக் கோரிக்கை அறிவிப்புகள், மாவட்ட கலெக்டர்  கூட்ட அறிவிப்புகள் மற்றும்  முதலமைச்சர்  வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.  நிலுவையிலுள்ள அறிவிப்புகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, திட்டங்களை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும்  எடுக்க வேண்டும்  என  அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
 மேலும்,    நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி   நகர்ப்புர மற்றும் ஊரகப் பகுதிகளில் தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு பின்வருமாறு அறிவுரைகள் வழங்கினார்
 அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் தங்குதடையின்றி வழங்க தொடர்புடைய அனைத்து அலுவலர்களும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அனைத்து உள்ளாட்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் குடிநீர்த் திட்டப் பணியாளர்கள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் வழங்கல் பணிகளை  எவ்விதப் பாகுபாடுமின்றி  முறையாக  செயல்படுத்த வேண்டும்.

மின் மோட்டார் பழுதடைந்தால் மாற்று ஏற்பாடு செய்ய பதிலி மின்மோட்டார் தயார் நிலையில் இருக்க வேண்டும். இருப்பில் உள்ள அனைத்து ஜெனரேட்டர்களும் இயங்கும் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

புதிய ஜெனரேட்டர்கள் வாங்க இயலாத பகுதிகளில், தனியார் ஜெனரேட்டர்களை  வாடகைக்கு எடுத்து குடிநீர்ப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீர் வற்றிவிட்டால் புவியியல் வல்லுநர்கள் மூலம் நீர் ஆதாரம் உள்ளதை உறுதிப்படுத்தி ஆழ்துளைக் கிணறுகள் உடனடியாக ஆழப்படுத்தப்பட வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட குடிநீரை குடிநீர் பயனுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.  அதனை பூங்கா, செடிகொடிகள், மரங்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தி  குடிநீரை வீணாக்கக்  கூடாது.

பொதுக்குழாய்களில் தண்ணீர் வீணாகாமல் தடுக்க பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மின்மோட்டார்களை வைத்து தண்ணீரை உறிஞ்சி, மற்ற பகுதிகளுக்கு குடிநீர் செல்வதைத் தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் குறைந்தால், தனியார் கிணறுகளையும், சமுதாயக் கிணறுகளையும் தூர்வாரி குடிநீரின் தரத்தை  பரிசோதனை செய்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பதை உறுதி செய்து, பொதுமக்களுக்கு வழங்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

ஆணையர்கள், மாநகராட்சி பொறியாளர்கள், நகராட்சி பொறியாளர்கள், பேரூராட்சி உதவி இயக்குநர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆகியோர் தங்கள் பகுதிகளில் உள்ள வார்டுகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியபடி பொறுப்பான அலுவலர் மூலம்  அன்றாடம் குடிநீர் வழங்கல் பணிகளை காலை 6 மணி முதல் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

குழாய் மூலம் குடிநீர் செல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் உடன் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணனி மூலமும், தொலைபேசி மூலமும் வார்டுகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலம் பெறப்படும் புகார்கள், மின் அஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முக்கியமாக குடிசைப் பகுதிகளிலும், ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தி சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் குக்கிராமம் வாரியாக குடிநீர் விநியோக நிலை குறித்து அனைத்து கிராம ஊராட்சிகளும் இணையதளம் வாயிலாக கண்காணிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படாத குக்கிராமங்களைக் கண்டறிந்து உடனுக்குடன் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு அரசினால் வழங்கப்படும் நிதி மற்றும்  அவைகளின் பொது நிதியில் பணிகள் மேற்கொள்ளும் போது, குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

142 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி ஏற்பட்டு, 62 ரூ மழைப்பொழிவு குறைந்து நீர் ஆதாரங்கள் அடிமட்ட நிலைக்கு வந்துவிட்டதால், பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் குடிநீர் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த ஊடகங்கள், செய்தித் தாள்கள், துண்டுப் பிரசுரம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் பிரச்சனைகள் பற்றி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் பரவலாக செய்திகள் வருவதால், அந்நிலையைத் தவிர்க்க அனைத்து அலுவலர்களும் விழிப்புடன் இருந்து இருக்கின்ற சூழ்நிலையில் குடிநீர் வழங்கல் பணியை சிறப்புடன் செய்ய வேண்டும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில்,  மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விவி. இராஜன் செல்லபா , வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.விபி.பரமசிவம் ,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முன்மை செயலாளர் உறர்மந்தர்சிங் இஆப தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை  இயக்குநர் தீரஜ்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர்  கோ.பிரகாஷ், பேரூராட்சிகளின் இயக்குநர்  க.மகரபூஷணம்,  மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மற்றும் திண்டுக்கல்  மாநகராட்சிகள் ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள், மதுரை மண்டலத்திற்குட்பட்ட ஊரக வளர்ச்சித் துறையின் திட்ட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் (ஊரக வளர்ச்சி),  நகராட்சிகளின் ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் மண்டல பொறியாளர்கள், மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்கள் மற்றும் உதவி செயற் பொறியாளர்கள்  மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: