முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கற்சூளை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்: கலெக்டர் எ.சுந்தரவல்லி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 5 மே 2017      திருவள்ளூர்
Image Unavailable

 

திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம் வயலாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புலம்பெயர்ந்த செங்கற்சூளை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாமினை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.மாவட்ட கலெக்டர் கூறியதாவது

வாழ்த்துக்கள்

 செங்கற்சூளைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கோடைக்கால பயிற்சி முகாம்கள் மூலம் நல்ல கதைகள், பழக்க-வழக்கங்கள் நல்ல மற்றும் தீமை தொடுதல் போன்றவைகளை கற்றுகொடுப்பதன் மூலம் அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும். இதுபோன்ற முகாம்களை ஏற்பாடு செய்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலகு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கோடைக்கால முகாம் குழந்தைகளின் வாழ்வில் மாற்றம் ஏற்பட முகாம் சிறப்பாக செயல்பட மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்;த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்

கலெக்டர் ஆய்வு

பின்னர், செங்கற்சூளையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாமை கையெழுத்து இயக்கத்தின் சார்பாக மாவட்ட கலெக்டர் கையொப்பமிட்டார். பின்னர் குழந்தைகளின் பள்ளிகளில் சேர்ப்பதற்கான மாற்று சான்றிதழ்களையும், கல்லூரி மாணவர்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். இறுதியாக பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த புத்தகம் மற்றும் அறிவியல் நூலகத்தையும், கோடை முகாமினையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செந்தில் குமார், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, அரசு அலுவலர்கள், தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துக்கொண்டனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்