முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் மகளிர் திட்ட துறையின் கீழ் செயல்படும் மகளிர் சுயயுதவிக்குழுக்களின் செயல்பாடுகள்: கலெக்டர் சி.அ.ராமன் ஆய்வு

சனிக்கிழமை, 6 மே 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் திருப்பத்தூர் ஒன்றியப்பகுதிகளில் மகளிர் திட்ட துறையின் கீழ் செயல்படும் மகளிர் சுயயுதவிக் குழுக்களின் செயல்பாடுகளை கலெக்டர் சி.அ.ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கிகளின் மூலம் கடனுதவிகள் பெற்று குழுவாக சுயதொழில் செய்து வருமானம் ஈட்டி வருவதை நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

சுயஉதவிக்குழுக்கள்

வேலூர் மாவட்டம் திருப்பதூர் ஒன்றியம் அண்ணாண்டபட்டி ஊராட்சியில் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக்குழுகள் வங்கிகளில் கடன் பெற்று பணியன் துணியிலிருந்து நூல்களை பிரித்தெடுத்து வாகனங்களை துடைக்க பயன்படுத்தும் வேஸ்ட்களாக தயாரிக்கும் தொழில் செய்து வருவதையும், மேலும் பாசிமணி செய்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பணிகளையும் பார்வையிட்டு தொழில் குறித்து கேட்டறிந்து பின்னர் 10 குழுக்களுக்கு தலா ரூ.1 இலட்சம் விதம் ரூ.10 இலட்சத்திற்கான கடனுதவிகளை வழங்கி பெண்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக அரசு வழங்கி வரும் இது போன்ற கடனுதிகளை பெற்று தொழில்களை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருப்பத்தூர் நகராட்சி திருவண்ணாமலை சாலையில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு தொடர்ந்து வேலைக்கு சென்ற பயனாளிகளின் வீட்டு உறுப்பினர்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு மூலம் வாழ்க்கை திட்டம் என்ற திட்டத்தின் வாயிலாக தையற்பயிற்சி இலவசமாக அளிக்கபடுவதை பார்வையிட்டு கேட்டறிந்தார். இத்திட்டத்தின் தற்போது வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், வேலூர் மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 60 நபர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கபடுகிறது. மேலும் இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ100 விதம் சம்பளமும் வழங்கப்படுகிறது. இதில் கணினி, எலக்ட்ரிசியன் போன்ற பயிற்சிகளும் மையங்களில் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி 75 நாட்கள் வழங்கபட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பும் மையம் மூலமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. இல்லையெனில் சுயமாக தொழில் செய்யவும் வழிவகைகள் செய்து தரப்படுகிறது என்று மகளிர் திட்ட அலுவலர் சிவராமன் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்.

நாட்டுக்கோழி வளர்ப்பு

பின்னர் சௌடேகுப்பம் ஊராட்சியில் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ரூ.20 ஆயிரம் கடனுதவி பெற்று வளர்த்து வரும் நாட்டு கோழி வளர்ப்பு பண்ணையை பார்வையிட்டு குழுக்களிடம் கேட்டறிந்தார். இந்த பண்ணை அமைக்க ரூ20 கடனுதவி பெற்று 100 நாட்டுக்கோழிகளை வாங்கி வளர்க்கிறோம். இது சுமார் 3 மாதத்தில் 2.5 கிலோ வரை வளர்த்து பிறகு விற்கலாம் அல்லது முட்டையிட்டு முட்டைகளை விற்றும் பணம் ஈட்டலாம். ஒரு கோழிகுஞ்சு வாங்க ரூ 60 செலவாகிறது. இத்திட்டம் வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக திருப்பத்தூர் ஒன்றியத்தில் சவுடேகுப்பம்,பள்ளவள்ளி மற்றும் கொடும்மாபள்ளி ஆகிய ஊராட்சிகளில் சுமார் 75 அலகுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று மகளிர் திட்ட அலுவலர் சிவராமன் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தார்.

பின்னர் திம்மானம்புதூர் ஊராட்சியில் ரூ1 இலட்சம் கடனுதவியுடன் பிளாஸ்டிக் அலங்கார பொருட்கள் உற்பத்தி தொழில் செய்து வரும் மகளிர் குழுக்களின் பணிகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். இந்த அலங்கார பொருட்கள் செய்ய தேவையான பொருட்களை சென்னையிலிருந்து மொத்தமாக வாங்கி வந்து பெண்கள் அனைவரும் இணைந்து தயாரிக்கிறோhம். இந்த கிராமம் முழுவதும் அனைவரும் இந்த தொழிலைதான் செய்து வருகிறோம். இவற்றை நகரங்களில் எங்கள் குழுக்களின் பெண்கள் அமைத்துள்ள கடைகளில் விற்பனை செய்துவிடுவோம். இந்த தொழிலில் எங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ 200 வருமானம் கிடைக்கிறது. ரூ1 இலட்சம் கடன் பெற்று தொழில் செய்தால் 30 சதவிகிதம் லாபம் எங்களுக்கு கிடைக்கிறது இதனால் எங்களின் வாழ்வாதாரம் பெருகி உள்ளது என்று மகளிர் குழு பெண்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தானர்.இந்த ஆய்வின் போது மகளிர் உதவி திட்ட அலுவலர்கள் திருமேனி, ரௌபதி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் திருப்பத்தூர் பிரேம்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகுபதி, பத்மநாபன், வட்டாட்சியர் ஸ்ரீராம் மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்