முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச மாநிலத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற அகிலேஷ் அரசு ரூ.21 லட்சம் செலவு

சனிக்கிழமை, 6 மே 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ  - உத்தரபிரதேசத்தில் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற அகிலேஷ் அரசு ரூ.21 லட்சம் செலவு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கூறப்பட்டுள்ளது.

பொதுநல மனு
உத்தரபிரதேச மாநிலம் நொட்டாவில் தலைமை என்ஜினீயராக இருந்த யாதவ்சிங் கடந்த 2015-ம் ஆண்டு சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் நூதன் தாக்குர் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

அப்பீல் மனு
இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்போதைய சமாஜ்வாடி அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரணையின் போதே அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.இதைத் தொடர்ந்து யாதவ் சிங்குக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தற்போது யாதவ்சிங் சிறையில் உள்ளார்.

ரூ.21 லட்சம் வரை ...
இந்த நிலையில் யாதவ் சிங் மீதான சி.பி.ஐ. விசாரணையை தவிர்க்கும் சட்ட நடவடிக்கைகளுக்காக சமாஜ்வாடி அரசு மேற்கொண்ட செலவுகள் குறித்து அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நூதன் தாக்குர் சமீபத்தில் மனுதாக்கல் செய்தார். அவரது மனுவுக்கு மாநில நீதித்துறை சிறப்பு செயலாளர் சுரேந்திர பால்சிங் பதில் அளித்துள்ளார். அதில் யாதவ் சிங் தொடர்பான வழக்கில் 4 மூத்த வக்கீல்கள் நியமிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு ரூ.21 லட்சம் வரை கட்டணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்