முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து இந்திய க்ராப்ட்ஸ் மேளா” கைவினைப் பொருட்கள் கண்காட்சி: கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 6 மே 2017      கன்னியாகுமரி
Image Unavailable

 

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் , தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு நிறுவனம் இணைந்து நடத்தும் ‘அனைத்து இந்திய க்ராப்ட்ஸ் மேளா" அனைத்து கைவினைப்பொருட்கள் கண்காட்சியினை, கன்னியாகுமரி நகர்புற கண்காட்சி திடலில், குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, தெரிவித்ததாவது:-

வாழ்க்கை தரம்

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டு, கைத்திறன் உலகில் தனியொரு முத்திரை பதித்து செம்மையாக செயல்படும் ஒரு நிறுவனம் ஆகும். நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளை கைவினை கலைகள் மூலம் பேணிகாப்பதோடு, கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு பல விருதுகளை கொடுத்து ஊக்குவித்து மற்றும் இக்கைவினை கலைகள் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும், ஓர் அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.

கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தோடும், பொது மக்களுக்கு நேரடியாக அவர்கள் விற்பனை செய்யும் வாய்ப்பாகவும், பூம்புகார் நிறுவனம் இக்கண்காட்சியினை நடத்துகின்றது.இவ்வாண்டு 250-க்கும் மேலான சிறப்பு கண்காட்சிகளை கைவினைஞர்களும், பொதுமக்களும் பயன் பெறும் வகையில், நாடெங்கும் நடத்தி வருவதோடு, பண்டிகை காலங்களில் விழாக்கால கண்காட்சிகளை செம்மையாக நடத்தி வருகின்றது.இதன் ஒரு தொடர்ச்சியாக, அபிவிருத்தி ஆணையர் (கைவினைப்பொருட்கள்), ஜவுளித்துறை அமைச்சகம், மத்திய அரசு, புதுதில்லி மற்றும் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் அங்கமான கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் ‘அனைத்து இந்திய க்ராப்ட்ஸ் மேளா" என்ற சிறப்பு கண்காட்சியை, கன்னியாகுமரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்புற கண்காட்சி திடலில் 05.05.2017 முதல் 14.05.2017 வரை (ஞாயிறு உட்பட) நடைபெற உள்ளத.

இக்கண்காட்சியில், சிறப்பு அம்சமாக அனைத்து கலை பொருட்களும் இடம் பெற்றுள்ளன. பஞ்சலோக சிலைகள், கற்சிற்பங்கள், சந்தனமர சிற்பங்கள், சந்தன கட்டைகள், தஞ்சாவூர் கலை தட்டுகள், தஞ்சாவூர் கலை ஓவியங்கள், குத்து விளக்குகள், பித்தளை கலை பொருட்கள், நூக்கமரம், வெண்மர சிற்பங்கள், சில்க் மற்றும் வெல்வெட் ஓவியங்கள், முத்து, பவளம் மற்றும் நவரத்தின கற்களால் செய்யப்பட்ட நகை வகைகள், 1 கிராம் கோல்டு நகைகள், மாலைகள், நவரெத்தின மாலைகள், ராசி கற்கள், ஸ்படிக மணிமாலைகள், மெத்தை விரிப்புகள், மங்களகிரி துணி வகைகள், பேன்சி சுடிதார் வகைகள், பருத்திக் சேலைகள் மற்றும் துணி வகைகள், கலம்காரி பைகள், பேன்சி சேலைகள், ருத்திராட்ச மணி மாலைகள், காதி சட்டைகள், பத்தமடை பாய்கள், சென்னப்பட்னா பொம்மைகள், லாக்கர்வேர் பொம்மைகள், காகித கூழ் பொம்மைகள், வாசனை மெழுகுவர்த்திகள், ஊதுவர்திகள், பனை ஓலை கைவினை பொருட்கள், வாழை நார் கைவினை பொருட்கள், சங்கினால் ஆன கைவினை பொருட்கள் மற்றும் ஏராளமான பரிசு பொருட்கள் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன.மேலும், குமரி கோடை விழாவினை முன்னிட்டு, கன்னியாகுமரியில், கலை நிகழ்ச்சிகள் 01.05.2017 முதல் 14.05.2017 வரை தினமும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறுகிறது.

எனவே, பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்து, கண்டுகளிக்குமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தெரிவித்தார்கள்.இந்நிகழ்ச்சியில், பூம்புகார் மேலாளர் அருண், சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் எ.கே.ரூப் சந்தர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்