முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தமிழக மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்: வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்

சனிக்கிழமை, 6 மே 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் அஸ்தம்பட்டி வன அலுவலகத்தில் சேலம் வன மண்டல அளவிலான வனத்துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்.சி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வசவராஜ், கலெக்டர் வா.சம்பத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் வனத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.

கோரிக்கை

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா அவர்களின் வழியில் உழைக்கும் மகளிருக்கு இருச்சக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 500 மதுப்பான கடைகள் நிரந்தர மூடப்படுதல், படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையினை இரட்டிப்பாக்குதல், மீனவர்களுக்கு 5,000 வீடுகள், முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பினி தாய்மார்களுக்கு ரூ.12,000 யிலிருந்து ரூ.18,000 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட முத்தான 5 மக்கள் நல திட்டங்களுக்கு கையெழுத்திட்டு அம்மா அவர்களின் கனவை நனவாக்கி வருகிறார்கள்.

அம்மா அவர்களின் அரசு மக்கள் நலன் காக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. தமிழக முதலமைச்சர் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி தமிழகத்தின் வளர்ச்சிக்காக நாள் ஒன்றிற்கு 20 மணி நேரம் அயராது உழைத்து தனது பணியினை செவ்வனே செய்து வருகிறார்கள். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆய்வு கூட்டங்களை தமிழக முதலமைச்சர் நடத்தி, மக்கன் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்கள்.அம்மா வனத்தில் உள்ள உயிரினங்களுக்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். அந்த வகையில் காட்டில் வாழும் யானை, காட்டெறுமை உள்ளிட்ட வன விலங்குகள் வறட்சி காலத்தில் தண்ணீர் வழங்குவது குறித்தும், வன விரிவாக்கம், உயிர்ப்பன்மை, பசுமையாக்குதல் திட்டம் ஆகியவை குறித்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வன உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக வனத்துறை அமைச்சர் தனியார் பட்டா நிலங்களில் மரம் வளர்ப்பு திட்ட ஊக்கத்தொகையாக 30 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார். மேலும் அமைச்சர் சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டு, சுற்றுப்பயணிகளுக்கு தேவையான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தொடாந்து, குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுற்றுப்பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் புதிய பெலிக்கான் பறவைகளை வன உயிரியல் பூங்காவிற்கு ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் தலைமை வன பாதுகாவலர் உலகநாதன், ., தலைமை வன பாதுகாவலர் (வன விரிவாக்கம்) விஜயேந்திரசிங்மாலிக் மண்டல மாவட்ட வன பாதுகாவலர் வேணுபிரசாத், மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், எஸ்.ராஜா, மனோண்மணி, வெற்றிவேல், ஆர்.எம்.சின்னதம்பி, மருதமுத்து, கு.சித்ரா, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்