முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அம்மா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் கடம்பூர்ராஜீ பெருமிதம்

சனிக்கிழமை, 6 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

 தமிழகத்தில் வறட்சியின் காரணமாக குடிநீர் பிரச்சினையை போக்க முதல்வர் எடபாடிபழனிசாமி தலைமையிலான அம்மா அரசு அவரின் உத்தரவின்படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்தார். 

குடிநீர் வழங்கும் பணி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் ரூ15 லட்சம் மதிப்பில் 4இடங்களில் ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ இதனை தெரிவித்துள்ளார்.கோவில்பட்டி நகரில் உள்ள பண்ணைத்தோட்டதெரு, வேலாயுதபுரம் 2வது தெரு, பசும்பொன்நகர், சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையை தீhக்கும் வகையில் ரூ.15லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீர் வழங்கும் திட்டப்பணிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தொடங்கி வைத்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ. தமிழகத்தில் வரலாறு காணத வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியினால் பொது மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்வர் ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சினையை போக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது.

கோவில்பட்டி நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட 2வது குடிநீர் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் ஆகஸ்ட்15க்கும் அத்திட்டம் முடிவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும், தற்காலிக ஏற்படாக கோவில்பட்டி நகருக்கு ரூ.40லட்சம் ஒதுக்கிடு செய்யப்பட்டு நகரின் பல்வேறு பகுதயியில் ஆழ்துளைகிணறு அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது கோவில்பட்டி பெருநகரசெயலாளர் எஸ். விஜயபாண்டியன், முன்னாள் வைஸ்சேர்மன் ராமர், மாவட்டபிரதிநிதி பொன்னுச்சாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago