ஈரோட்டில் அனைத்து கிளை சங்கங்கள் சார்பில் மே தினவிழா ஊர்வலம் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு

சனிக்கிழமை, 6 மே 2017      ஈரோடு
6-5-17 erode admk photo K A S no 1

ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கம் மற்றும் அனைத்து கிளை சங்கங்கள் சார்பில் ஈரோட்டில் மே தினவிழா ஊர்வலம் நடைபெற்றது.

குடும்ப நல உதவியை வழங்கினா்

வ.உ.சி.பூங்காவில் தொடங்கிய ஊர்வலத்திற்கு எம்.எல்.ஏ.தென்னரசு தலைமை வகித்தார்.  சங்க செயலாளர் தெய்வநாயகம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளரர்களாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு சங்க உறுப்பினர்கள் 12பேரின் மறைவுக்கு அவர்களது குடும்ப நல நிதி உதவி வழங்கினர். தொடர்ந்து எம்.எல்.ஏ.ராமலிங்கம் மேதின ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.வ.உ.சி.பார்க்கில் இருந்து சத்தி ரோடு,  மஜீத் வீதி,  மார்க்கெட்,  மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி,  காமராஜ் வீதி, பிரப் ரோடு வழியாக அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா எம்ஜிஆர் சிலை பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்ததுமேதின ஊர்வலத்தில், எம்.பி.செல்வகுமார சின்னையன், எம்.எல்.ஏ.சிவசுப்பிரமணி,பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர்மீன்ராஜா, சங்க தலைவர் விஜயகுமார்,  துணைத் தலைவர் சிவசாமி, பொருளாளர் சின்னசாமி ஆட்டோ சங்க தலைவர் சிவ தானு,மாணவரணி பொருளாளர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: