முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட்டக்காடு பகுதியில் 67 பயனாளிகளுக்கு ரூ.16.52 இலட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள்: அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்

சனிக்கிழமை, 6 மே 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி, கோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் விழா நேற்று (06.05.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இவ்விழாவில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,

மக்கள் பிரதிநிதிகள்

அம்மா அவர்களின் வழியில் மக்களுக்காக செயல்பட்டு வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகின்ற அரசாக விளங்கி வருகின்றது. மக்கள் பிரதிநிதிகள் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என அம்மா மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கெல்லாம் கட்டளை இட்டுச் சென்றுள்ளார்கள். அதன்படி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி தருகின்ற பணிகளை மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் அனைவரும் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.கடந்த 140 ஆண்டுகால வரலாற்றில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்தன் காரணமாக காவிரியிலும் நீர் குறைந்து ஆங்காங்கே அமைக்கப்படுகின்ற ஆழ்துளை கிணறுகளிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாத சூழ்நிலை இருந்து வருகின்றது. காவிரிக்கரையை ஒட்டிய பகுதியாக பள்ளிபாளையம் பகுதி இருந்தாலும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருவதற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாய்ப்புடைய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டும் அவ்வாறு வாய்ப்புகள் இல்லாத பகுதிகளில் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து அரசு மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருவதிலும் அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது. குடிநீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றித் தருகின்ற அரசாக விளங்கி வருகின்றது. அதேபோல் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை தருகின்ற அரசாகவும் அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் அரசு தொடர்ந்து சிறந்து விளங்கி வருகின்றது.

பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி கோட்டக்காடு பகுதி மக்கள் தங்களது சொந்த வீடுகளில் வசித்து வந்தாலும் வசித்து வந்த இடத்திற்கு பட்டாக்கள் இல்லாமல் இருந்தது. அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இன்றைய தினம் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. வீடு இருந்தும் மனை அற்றவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம் 65-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்திற்கு சொந்தக்காரர்களாக உருவாகி உள்ளனர். இதுபோன்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும் அவர்களின் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அரசு தொடர்ந்து நிறைவேற்றி தந்து கொண்டிருக்கின்றது. அம்மா அறிவித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றது. அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.இவ்விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி, கோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த 67 பயனாளிகளுக்கு ரூ.16.52 இலட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி வரவேற்புரையாற்றினார். நாமக்கல் சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் ஆர்.சின்னுசாமி, நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.கே.சுப்பிரமணியம், டி.சி.எம்.எஸ்.தலைவர் பி.என்.கந்தசாமி, பள்ளிபாளையம் முன்னால் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் தி;ரு.எஸ்.செந்தில், பள்ளிபாளையம் முன்னால் நகர்மன்ற தலைவர் தி;ரு.பி.எஸ்.வெள்ளியங்கிரி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பி.சுந்தரம், அரசு வழக்கறிஞர் சந்திரசேகர், பள்ளிபாளையம் அக்ரஹாரம் முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.பி.மாதேஸ்வரன், குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ரகுநாதன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இரா.கீர்த்தி பிரியதர்சினி நன்றி தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago