கோபி – சத்தி – பவானி உள்பட 330 பள்ளி வாகனங்கள் ஆய்வு 15 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது

சனிக்கிழமை, 6 மே 2017      ஈரோடு
011

கோபி, சத்தி, பவானி உள்பட 330 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வு

ஆண்டு தோறும் பள்ளி, கல்லூரி வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி குறைந்த வாகனங்களை சரிசெய்ய உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கோபி கோட்டத்pற்குட்பட்ட கோபி, சத்தி, பவானி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 330க்கும் மேற்பட்ட வாகனங்கள் கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிவேல் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஈஸ்வரமூர்த்தி (பவானி) முகுந்தன் (கோபி) அய்யாச்சாமி (சத்தி) பவானி டி.எஸ்.பி.ஜானகி ராமன், பள்ளித்துறை ஆய்வாளர் ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது 15 பள்ளி வானங்கள் தகுதி குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. தகுதி குறைந்த வாகனங்களில் உள்ள குறைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டு உரிய காலத்தில் ஆய்வுக்கு கொண்டுவர உத்திரவிடப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: