முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலுப்பூர் பேரூராட்சியில் பொது மக்களுக்கு புதிதாக 532 வீடுகள் கட்டப்படவுள்ளது : அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      புதுக்கோட்டை
Image Unavailable

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தலைமையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் 06.05.2017 அன்று வழங்கினார்.

குடிசை மாற்று வாரியம்

இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் வழங்கி பேசியதாவது. தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.730.80 லட்சம் மதிப்பீட்டில் 232 வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டதின் கீழ் வீடுகட்டுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசின் மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி மத்திய அரசின் பங்கு தொகையாக ரூ.1.50 லட்சம், மாநில அரசின் பங்கு தொகையாக ரூ.0.60 லட்சம் மற்றும் பயனாளியின் பங்குத் தொகையாக ரூ1.05 லட்சம் என 232 வீடுகள் ரூ.730.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இதில் மானிய தொகையாக ரூ.487.20 லட்சம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த ஏழை எளிய 232 குடும்பங்கள் பயன்பெறு உள்ளார்கள்.

மேலும் இலுப்பூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 200 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளதுடன், 100 பசுமை வீடுகளும் கட்டப்படவுள்ளது. இதன் மூலம் இலுப்பூர் பேரூராட்சியில் மட்டும் பொது மக்களுக்கு 532 வீடுகள் புதிதாக கட்டப்படவுள்ளது. மேலும் இப்பகுதி பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியின் மாவட்ட வருவாய் அலுவலர் அ.இராமசாமி, திருச்சிராப்பள்ளி மண்டல உதவி இயக்குநர் பேரூராட்சிகள் சதீஸ், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிலே;பிரபு, பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், கூட்டுறவு சங்க தலைவர் வி.இராமசாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் குருபாபு, முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்