முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் அருகே ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு மற்றும் நடுகல் கண்டுபிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      கிருஷ்ணகிரி

 

ஓசூர் அருகே அனுசோனை என்ற இடத்தில் சோழ பேரரசர் ராஜேந்திர சோழனின் 28&வது ஆட்சியாண்டை குறிப்பிடும் கல்வெட்டும், 11&ஆம் நூற்றாண்டை சேர்ந்த புலிகுத்தப்பட்டான் நடுகல்லும் கண்டறியப்பட்டுள்ளது.

கல்வெட்டு

கிருÔ¢ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அறம்கிருÔ¢ணன் தலமையில் பிரியன், சீனிவாசன், மஞ்சுநாத், உள்ளிட்ட குழுவினர் ஊர் மக்கள் சிலரது ஒத்துழைப்புடன் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, ஓசூர் அருகே கெலமங்கலத்திலிருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் அனுசோனை என்ற இடத்தில் சாலையோரத்தின் வலதுபுறத்தி¢ல் இந்த கல்வெட்டும், நடுகல்லும் இருப்பதை கண்டறிந்தனர். இந்த கல்வெட்டு மற்றும் நடுகல், தொல்லியல் துறை சார்பில் 1975&ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடுகல்லில், ஒரு வீரன் தனது வலது கையில் வாளை ஓங்கியவாறும், இடது கையில் குறுவாளை கொண்டு தன் மீது பாய வரும் புலியை குத்துவது போன்றும் இக்கற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வெட்டானது, கங்கை வென்றான், கடாரம் கொண்டான்.. என்ற 2 வரிகளை முதல் அடியாக கொண்டு தொடங்குகிறது. ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் பல இடங்களில் இருந்தாலும் இந்த மன்னனி¢ன் இரண்டு வெற்றிகளை குறிப்பிட்டு கல்வெட்டு இருப்பது, இங்குதான் முதன்முதலாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ராஜேந்திர சோழன் கங்கையையும், கடாரம் மற்றும் பூர்வதேசங்களையும் வென்றான் என்பதற்கு இந்த கல்வெட்டு மற்றும் நடுகல் மூலம் முதல் ஆதாரம் கிடைத்துள்ளது. மேலும் இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது, தொல்லியல் துறையால் அடையாளம் காணப்பட்டு 42 ஆண்டுகள் ஆகிய நிலையில் போதிய பாதுகாப்பின்றி கல்வெட்டு பாதிக்கு மேல் மண் மூடியும், பலகை கற்கள் சரிந்தும் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் மிக முக்கிய வரலாற்று தடயமான இவை அழியும் நிலையில் உள்ளன, தமிழ்நாடு தொல்லியல் துறையும், மாவட்ட நிர்வாகமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வரலாற்று ஆய்வு மையம் சார்பாக, அறம்கிருÔ¢ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்