Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாவட்டம் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆணைகளை வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      கோவை
Image Unavailable

வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா

கோயம்புத்தூர் மாவட்டம், வேடப்பட்டி பேரூராட்சி நம்பியழகன்பாளையத்தில் அம்மா உடற்பயிற்சி கூடம் திறப்புவிழா, அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்   தலைமையில், நடைபெற்றது. இவ்விழாவில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  ரூ.30லட்சம் மதிப்பில் அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டும்பணியினை தொடங்கிவைத்து,

225 பயனாளிகளுக்கு

நம்பியழகன்பாளையம், பசுபதிபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.708.75 லட்சம் மதிப்பில் 225பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கித் தெரிவிக்கையில்,
அம்மா அவர்களின் கனவுத்திட்டமான அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் துவக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து  அம்மா அவர்களின் நல்லாசியுடன் இத்திட்டம் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

முழு மான்யம் வழங்கப்படும்

அம்மா  இத்திட்டத்தை துவக்கி வைக்கும்பொழுது, முதல்கட்டமாக 10லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு கட்டி வழங்கப்படும் அதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும், ரூ.2.10லட்சம் முழு மான்யம் வழங்கப்படும் என அறிவித்து துவக்கி வைத்தார்கள். அதற்கேற்ப இன்றும்  அம்மா  வழியில் நடைபெற்று வரும் தமிழக அரசு  தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனைப்படி, இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் குடிசைகளே முற்றிலும் இல்லாத மாநிலமாகவும், மற்றும் ஓட்டு வீடு, சிமெண்ட் சீட் வீடு ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டு அனைத்துப்பகுதிகளிலும் காண்கீரீட் வீடு அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

உயர்மட்ட பாலங்கள்

அதுமட்டுமல்லாமல், போக்குவரத்தினை எளிமையாக்கும் வகையில் உயர்மட்டப்பாலங்கள், அடிப்படை வசதிகள், தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள், கூடுதல் கூட்டுக்குடிநீர் திட்டங்கள், என மக்களுக்கு நலன்பயர்க்கும் திட்டங்கள் பலவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.  அம்மா அவர்களின் வழியிலேயே  முதல்வர் அவர்களும், பதவியேற்றதும் முக்கிய 5கோப்புகளில் கையெழுத்திட்டு, அத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு ஒருகோப்புகள் விடாமல் அனைத்துக்கோப்புகளிலேயும் கையெழுத்திட்டுள்ளார்கள். மேலும் மேலும், தொடர்ச்சியாக  அம்மாவின்  இந்த அரசு அனைத்துதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களை என்னென்றைக்கும் வழங்கும் என  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி   தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், குடிசை மாற்று வாரியம் கண்கானிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் ராஜசேகரன், துணை இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம், வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்