பழவேற்காடு அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      திருவள்ளூர்
Punneri 2017 05 07

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டம்,பழவேற்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா வெகுவிமரிசையாக நடைப்பெற்றது.

36 வருடங்கள்

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் பழவேற்காடு டச்சு தலைமைச்செயலகமாக செயல்பட்டு வந்தது.அப்போது திபேஷ் என்ற டச்சுக்காரருக்கு அன்னை ஸ்ரீ திரௌபதியம்மன் அருள்பாலித்ததை கருத்தில் கொண்டு அவரால் அன்னைக்கு திருக்கோயில் அமைக்கப்பட்டது.36 வருடங்களுக்கு முன் கிராம மக்களால் கோயில் விமானங்கள்,ராஜகோபுரங்கள் அமைக்கப்பட்டது.தற்போது மூன்றாவது முறையாக பனிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோயிலின் திருக்குடமுழுக்கு நீராட்டானது ஆலய குருக்கள் அனந்த கிருஷ்ண பட்டாச்சாரியார் தலைமையில் தர்மகர்த்தா சீனிவாச முதலியார் முன்னிலையில் நடைப்பெற்றது.

ராஜகோபுரங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைப்பெற்று புனித நீர் தெளிக்கப்பட்டது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.அறங்காவலர்குழுக்கள் மற்றும் விழாக்குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: