முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகள்: அமைச்சர்கள் திண்டுகல் சி.சீனிவாசன் , பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆய்வு செய்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் காலேப்பள்ளி, ராயக்கோட்டை வன சரகம் ஊடேதுர்கம் காப்புகாடு பகுதிகுட்பட்ட லட்சுமிபுரம் சின்னாறு பகுதியில் 4.50 லட்சம் மதிப்பில் யானைகள் ஊருக்குள் புகாத வகையில் ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள 190 பாரோ ஒயர் தடுப்பு துண்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், சிவலிங்கம்புரம் கத்;தாளப்பள்ளம் ஓடையின் குறுக்கே ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கசிவு நீர் குட்டை தடுப்பணை பணிகளை வனத்துறை அமைச்சர் திண்டுகல் சி.சீனிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அமைச்சர்கள்ஆய்வு

பின்பு கேரட்டி மலை வாழ் இன மக்கள் 24 பேருக்கு சிறு வன மகசூல் பங்கீட்டு தொகை, தனியார் நிலத்தில் இடைபடு காடுகள் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 449 பயனாளிகளுக்கு ஊக்க தொகையாக ரூ.18 லட்சத்து 5 ஆயிரத்து 381 க்கான காசோலைகளையும், தருமபுரி வனக்கோட்டத்தில் வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 5 பயனாளிகளுக்கு ரூ.53 ஆயிரத்து 250 மதிப்பிலான நிவராண தொகைக்கான காசோலைகள் என மொத்தம் 478 பயனாளிகளுக்கு ரூ. 30 லட்சத்து 58 ஆயிரத்து 631 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வனத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது:

மறைந்த தமிழக முதல்வர் அம்மா கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க வன இலக்காக மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆய்வு செய்யும் வகையில் இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகள் மூலம் மக்களுக்கும் மற்றும் வன விலங்குகளுக்கு எவ்வாறு பயன் பெறுகிறது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. தற்போது வனப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் மழைநீர் சேகரித்து வன விலங்குகளுக்கு பயன் பெறும் வகையில் மேலும் உயர்த்தி கட்டப்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதே போல மனிதனுக்கு செய்யப்படவுள்ள பாதுகாப்பு பணியை வன இலக்கா மூலம் செவ்வனே செய்யப்பட்டு வருகிறது.

வன விலங்குகளால் விளை நிலங்களில் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு முறையாக வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வன உயிரிங்களால் ஏற்படும் மனித உயிர் சேதத்திற்கு ரூ. 4 லட்சமும், காயங்களுக்கு தகுந்தவாறு ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 50 ஆயிரம் என இழப்பீடு வழங்கப்படுகிறது. வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலமாக குடிநீர் தொட்டிகளில் நிரப்பும் பணி செவ்வனே செய்யப்பட்டு வருகிறது. மேலும் பிலிகுண்டு முதல் மணல்மேடு வரை படகு போக்குவரத்து துவக்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பரிசல் இயக்க வனத்துறை மூலம் அனுமதி கோரியதையடுத்து சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசல் ஒட்டிகள் செயல்பட வேண்டும். அதேபோல பரிசல் ஒட்டும் போது பார்வையாளர்கள் உயிருக்கு பாதுகாப்பு இருக்கும் வகையில் செயல்படவேண்டும்.

தமிழ்நாடு காடுவளர்ப்பு திட்டத்தின் கீழ் வன பொருட்களினால் விற்பனை மூலம் கிடைக்க பெறும் வருவயை சம்மந்தப்பட்ட கிராம வனக்குழு கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வனம் சார வன விளைப்பொருட்கள் சம்மந்தப்பட்ட கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் புளி மற்றும் இதர மகசூல் மூலம் கிடைத்து வரும் வருவாயில் 75 சதவிகிதம் கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கும், 25 சதவிகிதம் கிராம வனக்குழுவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. சிறு வன மகசூல் மூலம் கிடைக்கும் வருவாயை மழை வாழ் மக்கள் சங்க கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளத்தில் மொத்தம். ரூ. 1கோடியே 40 லட்சத்து 57 ஆயிரத்து 994 மதிப்பில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 75 சதவிகித தொகை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்குட்பட் ஓசூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் உரிகம் ஆகிய 7 வனசரகங்களுக்கு உட்பட்ட மழைவாழ் மக்களுக்கு குடும்ப வளர்ச்சி பணிகளாகிய விவசாயம் செய்தல், கால் நடை வாங்குதல், மருத்துவ செலவு மேற்கொள்ளுதல், குழந்தைகளை படிக்க வைத்தல், வீடுகள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு செய்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் செய்துக்கொள்ள 80 கிராமங்களில் 2103 மழைவாழ் குடும்பங்களுக்கு தலா ரூ. 700 முதல் ரூ. 50 ஆயிரம் வரைமொத்;தம் 95 லட்சத்து 6 ஆயிரத்து 900 நிதி இன்று மட்டும் வழங்கப்படுகிறது. இந்ந நிதியினை பெற்று தங்கள் வாழ்வாதரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என பயன்படுத்;தி வனத்துறை அமைச்சர் திண்டுகல் சி.சீனிவாசன் உரையாற்றினார். முன்னதாக மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டபணிகள், விழிப்புணர்வு பணிகள் மற்றும் தடுப்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கத்தை, வனத்துறை அமைச்சர்; மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கோவிந்தராஜ், முதன்மை தலைமை வன பாதுகாவலர் பசவராஜ் இ.வ.ப., தலைமை வன பாதுகாவலர் சுதான்ஷா குப்தா இ.வ.ப. நிர்வாகம் மற்றும் நிதி, தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமை பாதுகாப்பு திட்ட இயக்குநர் உலகநாதன் இ.வ.ப., வன பாதுகாப்பு அலுவலர் வேணுபிரசாந்த் இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, ஓசூர் வன பாதுகாவலர் ராஜேந்திரன், அரூர் வன கோட்ட பாதுகாவலர் செல்வி.செண்பகபிரியா, செல்வி, பிரியதஷ்ஷினி, தருமபுரி மாவட்ட வன பாதுகாவலர் க.திருமால், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.தென்னரசு, கிருஷ்ணகிரி நகர் மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் மது (எ) ஹேம்நாத், தருமபுரி மத்திய கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், வன சரகர்கள் சுகுமார், ஆறுமுகம், தனபால், முருகேசன். நாகேஷ் வட்டாட்சியர்கள்; ராமகிருஷ்ணன், பூசன் குமார், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago