முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் வழங்கிட சிறப்பு முகாம் : கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      கரூர்
Image Unavailable

வேளாண் நோக்கத்திற்காகவும், மண்பாண்டம் செய்வதற்காகவும் வீடுகளுக்கு பயன்படுத்திடவும், விலையில்லாமல் பொதுமக்களுக்கு மண் வழங்குதல் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை குடிமராமத்து செய்து அதன் மூலம் நிலத்தடி நீரை சேமிப்பது தொடர்பாக சிறப்பு முகாம் கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பிர்கா தலைமையிடத்திலும் நேற்று (6.05.2017) நடைபெற்றது. இதில், குளித்தலை, நங்கவரம், தோகமலை ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மண்பாண்டம்

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது : கரூர் மாவட்டத்தில் குளம், ஏரி, கண்மாய், நீர்நிலைகள் ஆகியவற்றில் படிந்துள்ள வண்டல், சவுடு, களிமண்களை விவசாயத்திற்கு பயன்படுத்திட வெட்டி எடுத்திடவும், நீர்நிலைகளை தூர்வாரி குடிமராமத்து பணி செய்திடவும் அரசு ஆணையிட்டுள்ளது. இதற்காக கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 18 குளங்களும், பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள 108 குளங்களும், இதர குளங்கள் 401 என மொத்தம் 527 குளங்கள் இனங்கண்டறியப்பட்டு இவற்றில் பொதுப்பணித்துறையின் வாயிலாக 14 குளங்களுக்கும், ஊரக வளர்ச்சி கட்டுப்பாட்டில் உள்ள 52 குளங்களுக்கும் என 66 குளங்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வேளாண்மைக்கும், மண்பாண்டம் செய்வதற்கும் விலையில்லாமல் மண் வழங்கப்படவுள்ளது.

விவசாயத்திற்கு ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு 75 கனமீட்டர் அதாவது 25 டிராக்டர் லோடுகளும், புன்செய் நிலத்திற்கு 90 கனமீட்டர் அதாவது 30 டிராக்டர் லோடுகளும், சொந்த வீட்டு உபயோகத்திற்கு 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் செய்வதற்கு 20 டிராக்டர் லோடுகளும் வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள், விவசாயிகளுக்கு சிறப்பு முகாமில் மண் எடுத்துச்செல்வதற்கான உரிமம் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் தங்கள் கிராமப்பகுதியைச் சார்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று விண்ணப்பித்து விலையில்லாமல் மண் எடுத்துச் செல்லலாம்.

குளங்களில் மண் எடுக்கும்போது, கரைகளை சேதப்படுத்தாமலும், கரைகளை ஒட்டி மண் எடுக்காமலும், கரையின் மதகுகளில் வாகனத்ததை இயக்காமலும், குளத்திற்குள் மண் சேமிக்காமலும் மண் எடுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அல்தாப், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜ்மோகன், வருவாய் கோட்ட அலுவலர் சக்திவேல் (குளித்தலை), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்