முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏரிகளில் இலவசமாக விவசாயிகளுக்கு மண் எடுக்கும் பணி: கலெக்டர் வா.சம்பத் பார்வையிட்டு ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      சேலம்
Image Unavailable

 சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே ஏரியில் இலவசமாக மண் எடுக்கும் பணியை கலெக்டர் வா.சம்பத், ., பார்வையிட்டு ஆய்வு. இது குறித்து கலெக்டர் தெரிவித்தாவது.

மண் எடுக்கும் பணி

தமிழக முதல்வர் விவசாய நிலங்கள் மேம்பாடு மற்றும் மண்பாண்டத் தொழிலுக்கு ஏரிகளில் இருந்து இலவசமாக மண் எடுக்க அனுமதி அளித்து உள்ளார்கள். எனவே, ஏரிகளில் இலவசமாக மண் விவசாயிகளுக்கு, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் முதலாவதாக எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி அருகே உள்ள சாணாரப்பட்டி ஊராட்சி கனக்கன் ஏரியில் இலவசமாக மண் எடுக்க விவசாயிகள் பச்சைமலை, கந்தசாமி, செங்கோட்டையன் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் மண் எடுக்கப்பட்டு டிராக்டரில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரி, கண்மாய், குளங்கள் உள்ளிட்ட 959 நீர் நிலைகள் இத்திட்டத்திற்கு தகுதி வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மண்பாண்டத்தொழில் செய்பவர்கள் உதவி கலெக்டர் மற்றும் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்களிடம் சான்று பெற்று ஏரிகளில் இலவசமாக மண் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், ., தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியின் போது மேட்டூர் சார் கலெக்டர் மேகநாதரெட்டி, ., , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா, மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago