முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் , நிவாரண நிதி, இலவச வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடு கட்டும் திட்டத்திற்காக ஆணை: கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

திங்கட்கிழமை, 8 மே 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (08.05.2017) கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது.

திட்டங்கள்

தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பொதுமக்களை விரைந்து சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன்றைய தினம் பொதுமக்களிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 416 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மனுக்களை தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி உடனடி தீர்வுகான உத்தரவிடப்பட்டது.

சேலம் ரயில் விபத்தில் உயிரிழந்த யோகேஸ்வரன் குடும்பத்தினருக்கும், டெல்லி நேரு பல்கலைக்கழத்தில் உயிரிழந்த முத்துக்கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கும் கலெக்டர் வா.சம்பத், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பசுமை வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை வழங்கினார். மேலும், மேட்டூர் காவிரி ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த செல்வன் அரவிந்த் குடும்பத்தினருக்கும் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000 நிதியுதவி, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் முதியோர் உதவித்தொகை மற்றும் மனு அளித்தவுடன் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,200 மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி மற்றும் வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago