முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு : பிரதமர் மோடி அறிவிப்பு

திங்கட்கிழமை, 8 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - வடகிழக்கு மாநிலங்களில், சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என பிரதமர்  நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.  மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில், பாரத் சேவாஸ்ரம் சங்கத்தில், நூற்றாண்டு விழாவை டெல்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் உரையாற்றினார். வடகிழக்கு மாநிலங்களை, தெற்காசி நாடுகளின் நுழைவு வாயிலாக மாற்ற அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் ஆனால், அம்மாநிலங்களில் காணப்படும் சுகாதாரமற்ற சூழ்நிலை இந்த கனவுத்திட்டத்தை சிதைத்துவிடும் அபாயம் உள்ளதாகவும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.

உலகில், மிக தூய்மையான நகரங்களில் கேங்டாக் நகர் மட்டுமே முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், மற்ற நகரங்கள் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளதாக வருத்தம் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் சமச்சீரான வளர்ச்சி கொண்ட மாநிலங்களாக மாற்ற அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு, தன்னார்வ அமைப்புகளும் துணை நிற்க வேண்டும் என்றும் பிரதமர்  மோடி கேட்டுக்கொண்டார்.

வடகிழக்கு மாநிலங்களில் சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 19 மிகப்பெரிய ரயில்வே திட்டங்களும் இப்பிராந்தியத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர்  நரேந்திரமோடி தெரிவித்தார். இப்பிராந்தியத்தில் உள்ள சிறிய விமானநிலையங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்