முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆனந்தல் கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 8 மே 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆனந்தல் கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கிவைத்தார்.

புதிய ஆரம்ப சுகாதார நிலையம்

ஆனந்தல் கிராமத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பாக புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில், தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், கீழ்பென்னாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.அரங்கநாதன், முன்னாள் வணிகவரி ஆலோசனைக் குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன், மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசுகையில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்பொழுது 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 6 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. இதில் திருவண்ணாமலை சுகாலீதாரப் பகுதி மாவட்டத்தில் 49 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 3 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆனந்தல் கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தோற்றுவிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஆனந்தல் கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டுவதற்கு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனந்தல் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் ஆர்ப்பாக்கம், பூதமங்கலம், வேடந்தவாடி என 3 துணை சுகாதார நிலையங்களைக் கொண்டு செயல்பட உள்ளது. இதன்படி ஆரப்பாக்கம், ஆரப்பாக்கம் காலனி, துர்கம், பொய்யானந்தல், ஆனந்தல், ஆனந்தல் பட்டி, கொரக்கந்தாங்கல், பூதமங்கலம், சாமந்தியாபுரம், பட்டிகொரக்கனந்தல், வி.பி.குப்பம், விஜயநகரம், நெய்க்குன்னி, காட்டுவானத்தம் சீனந்தல், வேடந்தவாடி உள்ளிட்ட 15 கிராமத்தை சேர்ந்த 16,807 பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இதுவரை மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 14 கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டியிருந்தது. இனி வருங்காலங்களில் சிரமமின்றி தங்கள் அருகாமையில் உள்ள ஆனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தால் பயன்பெறுவார்கள். எனவே, பொது மக்கள் அனைவரும் ஆனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்