முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்மாம்பட்டு கிராமத்தில் அம்மச்சார் அம்மன் 17-ம் ஆண்டு பிரமோற்சவ திருவிழா

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      விழுப்புரம்
Image Unavailable

 

செஞ்சி வட்டம் கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோயில் மற்றும் செல்வவிநாயகர், ஸ்ரீசீனுவாசப்பெருமாள் ஆகிய கோயில்களின் 17-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவும், 8-ம் ஆண்டி திருத்தேர் விழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

பால்குடம் ஊர்வலம்

ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மச்சார் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.செல்வவிநாயகர் மற்றும் ஸ்ரீசீனிவாசபெருமாள், அம்மச்சார் அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு பால் அபி்ஷேகம் நடைபெற்றது.

பலர் பங்கேற்பு

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பத்மினிதேவி்மூர்த்தி, பஸ் உரிமையாளர் கிருஷ்ணதாஸ்ரெட்டியார், நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. தினமும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்