முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணவாளகுறிச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      கன்னியாகுமரி
Image Unavailable

 

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் ஏ. ஞானசேகரன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அ.விஜயகுமார் ஆகியோர்கள் முன்னிலையில், மணவாளகுறிச்சியில், மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையினை திறந்து வைத்தார்.

ஆய்வுக் கூட்டம்

பின்னர், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்ற துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கடன்கள் வழங்கி சாதனை

அம்மா அவர்களின் நல்லாசியுடன், செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு, கூட்டுறவுத்துறை உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு கடன் உதவிகள் வழங்கி, அவர்களது வாழ்வாதாரம் உயர வழிவகை செய்து வருகிறது. மேலும், இதுவரை இந்தியாவிலே, தமிழ்நாட்டில் மட்டும்தான் கூட்டுறவுத்துறையின் மூலம், கூட்டுறவுத்துறை உறுப்பினர்கள் கடன்கள் வழங்கி, சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இன்று தமிழகத்தில், கூட்டுறவுத்துறையின் மூலம், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி, சாதனை படுத்தி வருகிறது.

பல்வேறு கிளைகள்

அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகம் முழுவதும் 88 மத்திய கூட்டுறவு கிளைகள் திறக்கப்பட்டது. மேலும், அம்மா 110 விதியின்கீழ், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதியதாக நான்கு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் திறக்கப்படும் என அறிவித்து, அதனை உடனடியாக மூன்று கிளைகள் (நித்திரவிளை, திட்டுவிளை, அருமனை) காணொலிக்காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்கள். மேலும், இன்றைய தினம், என்னால் மணவாளக்குறிச்சியில், புதிய மத்திய கூட்டுறவு வங்கி கிளை திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதைபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 கிளைகள் (மணவாளக்குறிச்சி கிளை) கூட்டுறவு உறுப்பினர்களின் நலன் கருதி, சிறப்பாகவும், மிகுந்த லாபம் பெறும்வகையில், செயல்பட்டு கொண்டு வருகிறது. அம்மா அவர்களின் அரசு, மக்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், கடைகோடியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும், அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, செயல்பட்டு கொண்டிருக்கிறது.

2023 விஷன்

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகாலமாக, 58 இலட்சத்து 57 ஆயிரத்து 408 விவசாயிகளுக்கு 27 ஆயிரத்து 442 கோடியே 22 இலட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2015-16ம் ஆண்டில், அம்மா அறிவித்திருந்தார்கள். அதில் 2006 முதல் 31.03.2016 வரை தமிழகத்தில் உள்ள 12 இலட்சத்து 2 ஆயிரம் சிறு, குறு விவசாயிகளின், ரூ.3,308 கோடியளவில் பெறப்பட்ட கடனுதவிகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்;மா அவர்களின் தொலைநோக்கு திட்டமான 2023 விஷன் என்ற திட்டத்திற்காக தமிழக அரசு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்வகையில், செயல்பட்டு கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

ஆய்வுக்கூட்டத்திற்கு முன்பாக, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 62 கூட்டுப்பொறுப்புக் குழுக்களுக்கு ரூ.62 இலட்சமும், ஒரு நபருக்கு புதிய வீடு கட்டும் வகையில் ரூ.5.00 இலட்சமும், ஒரு நபருக்கு வீடு பராமரிப்பு வகையில் ரூ.2.00 இலட்சம் மற்றொரு நபருக்கு வீடு பராமரிப்பு வகையில் ரூ.3.00 இலட்சமும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சமும், 4 நபர்களுக்கு சிறு வணிகக் கடனாக ரூ.40 ஆயிரமும், ரீத்தாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 32 கூட்டுப்பொறுப்புக் குழுக்களுக்கு ரூ.64 இலட்சமும் என மொத்தம் ரூ.1.38 கோடிக்கான கடன் உதவிகளை காசோலையாக வழங்கினார்.ஆய்வுக்கூட்டத்தில், புதிய ஸ்மார்ட் கார்டுகள் விநியோக விவரம், நியாயவிலை கடை ஆய்வு விவரம், புதிய குடும்ப அட்டைகள் விவரம், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அரிசி நுகர்வோர் விவரம், தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழக கிட்டங்கிகள் விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு கூடுதல் பதிவாளர் இராமலிங்கம், கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் நடுக்காட்டு ராஜா, கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர். சம்பத் சந்திரா, அரசு வழக்கறிஞர் ஞானசேகரன், மணவாளகுறிச்சி கூட்டுறவு கிளை மேலாளர் சீஜாகுமாரி, தாணுபிள்ளை, ராஜரெத்தினம், ரெஜிஸ்ராஜ், கனகராஜன், நாஞ்சில்சந்திரன், தம்பிதங்கம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்