முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவம் பதிலடி: பாகிஸ்தானின் பதுங்கு குழிகள் ஏவுகணைகள் வீசி அழிப்பு

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ராணுவ வீரர்கள் 2 பேரின் தலையைத் துண்டித்த பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீரின் எல்லைப்பகுதியில் அந்நாட்டு ராணுவம் அமைத் திருந்த பதுங்குக் குழிகளை ஏவுகணைகளை வீசி இந்திய ராணுவம் அழித்தது.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதி அமைந்துள்ள நவ்ஸீரா-வில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டது. அங்கு இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவும் வகையில் அமைக்கப் பட்டிருந்த ஏராளமான பதுங்குக் குழிகளைக் குறிவைத்து வெடி குண்டுகள் மற்றும் ஏவுகணை களை வீசி தாக்கி அவற்றை அழித்தது.

இந்திய ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் எந்தவிதமான எதிர் தாக்குதலும் நடத்தவில்லை. அழிக்கப்பட்ட பதுங்கு குழிகள் தீவிரவாதிகள் இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவுவதற்காக அமைக்கப் பட்டவை. அவை முழுவதும் தரைமட்டமாக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் கிருஷ்ணகாதி எல்லைப் பகுதியில் கண் காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை, பாகிஸ்தான் ராணுவம் தலை துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்தது.

இதற்கு தக்க பதிலடி தரப்படும் என இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் சூளுரைத்திருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானின் பதுங்குக் குழிகள் ஏவுகணைகள் வீசி தகர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் இந்திய ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தும் என்ற பீதியில் பாகிஸ்தான் ராணுவம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago