முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது தொடர்பாக ஆய்வு கூட்டம்: கலெக்டர் வா.சம்பத் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்குவது தொடர்பாக குடிநீர் பம்பு இயக்குபவர்களுக்கு கலெக்டர் வா.சம்பத், தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று (09.05.2017) நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது.

முக்கியத்துவம்

 

தமிழக முதலமைச்சர் அவர்கள் குடிநீர் தொடர்பான பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து அத்தியாவசிய தேவையான குடிநீர் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் குடிநீர் தொடர்பான ஏதேனும் புகார் இருந்தால் தெரிவிக்க ஏதுவாக 58 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 அந்தந்த ஊராட்சி ஒன்றிய அளவில் 1,439 குடிநீர் பம்பு இயக்குபவர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறித்தும், முறையான அனுமதி பெறாமல் பயன்பாட்டில் உள்ள இணைப்புகளை அகற்றுப்படுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, ஒன்றிய பொறியாளர்கள், மண்டல துணை வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய செயலர்கள், குடிநீர் பம்பு பொறுத்துநர்கள், குடிநீர் பம்பு இயக்குபவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாத இடங்களிலிருந்து பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள், குடிநீர் பம்பு இயக்குபவர்களை தொடர்பு கொண்டு பிரச்சனையை சரிசெய்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி ஒன்றிய அளவில் தொடர்ச்சியாக இப்பணியை கண்காணித்திட குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி முகமை ஆகிய அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளில் மெத்தனமாக செயல்படும் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜய்பாபு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் தெய்வசிகாமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குழந்தைதெரசா, மாவட்ட ஊராட்சி குழு செயலர் ராஜேந்திரபிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், மண்டல துணை வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய செயலர்கள், குடிநீர் பம்பு பொறுத்துநர்கள், குடிநீர் பம்பு இயக்குபவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்