முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் கோட்டை மாரியம்மன் மாவிளக்கு,அலகு குத்தும் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

ஓசூர் கோட்டை மாரியம்மன் மாவிளக்கு திருவிழா,அலுகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தும் விழா நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரில் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான இஇந்த கோவிலில் மாவிளக்கு திருவிழா மற்றும் ஊர் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் கோட்டை மாரியம்மன் கோவில் மாவிளக்கு திருவிழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.முன்னதாக, விழாவையட்டி கடந்த மாதம் 25ந் தேதி கோவில் முன்பு கொடியேற்றம், பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது. விழா நாளான நேற்று அதிகாலை முதலே பக்தர்களும், பொதுமக்களும் திரளாக மாரியம்மன் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்று மாரியம்மனுக்கு பூஜைகள் செய்தனர்.

 ஏராளமான பக்தர்கள் தங்கள் முதுகு மற்றும் கன்னத்தில் அலகு குத்தி, ராட்சத கிரேனில் அந்தரத்தில் தொங்கியவாறு ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அதேபோன்று பெண் பக்தர்களும் கன்னம் மற்றும் முதுகில் அலகு குத்தி ஊர்வலமாக சென்று அம்மனை பக்தியுடன் வழிபட்டனர். மேலும் எல்லம்மன் கோவில், நெசவுத்தெருவில் உள்ள தேசம்மா, ராயக்கோட்டை சர்க்கிள் பகுதியில் உள்ள மண் மாரியம்மா, கங்கம்மா, ஏடுகிரியம்மா உள்ளிட்ட கோவில்களுக்கும் சென்று வழிபட்டார்கள்.

விழாவை முன்னிட்டு ஓசூரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விழாவையட்டி ஓசூர் நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்