முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மற்றொரு 'சர்ஜிக்கல் ஆப்ரேஷன்' நடத்தப்படும் : பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தினால் மற்றொரு சர்ஜிக்கல் ஆப்ரேஷன்' நடத்த வேண்டியது வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பலவீனமாக இல்லை
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:- பாகிஸ்தான் இந்திய எல்லைகள் மீது ஆக்கிரமப்பு செய்தால் தக்க பதிலடி கொடுக்கும் படி பாதுகாப்பு படை வீரர்களை கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தினால் நம் பக்கத்தில் இருந்து குண்டுகளை எண்ணக்கூடாது. இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவம் மற்றொரு சர்ஜிக்கல் ஆப்ரேஷன் நடத்த வேண்டி வரும். பிரதமர் மோடி தலைமையில் மூன்று ஆண்டுகால ஆட்சியில் உலகின் முன்னனி தலைவர்களாக நாங்கள் இருந்து வருகிறோம். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா தற்போது பலவீனமாக இல்லை என்றார்.

வேண்டுகோள்
ராணா பிரதாப் சிங் குறித்து அவர் தெரிவிக்கையில்., “அக்பரை சிறப்பானவர் என்ற வரலாற்றாசிரியர்கள் ராணாவை அவ்வாறு அழைப்பதில்லை என்பது எனக்கு வியப்பளிக்கிறது. அவர் ஒரு உண்மையான ராஜதந்திரியாவார். அவர் அரியணையை தியாகம் செய்தும், கேளிக்கைகளைத் துறந்தும் சுயமரியாதைக்காக போரிட்டார். வீரத்திற்கு தனித்ததொரு சிறப்பான அந்தஸ்தைக் கொடுத்தார். எனக்கு அக்பரை சிறப்பானவர் என்று அழைப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் வரலாற்றில் ராணா பிரதாப் சிங்கிற்கு பொருத்தமானதொரு மதிப்பீடு வழங்க வரலாற்றிசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.முதல் விடுதலைப் போரில் (1857) பங்கெடுத்தவர்களுக்கு ராணா ஒரு முன்மாதிரியாக விளங்கினார். ராணாவிற்கு சிறப்பானதொரு அந்தஸ்தை வழங்காதது பெரிய தவறாகும். இத்தவறு களையப்பட வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்