முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      திருநெல்வேலி

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட பாணியில் திருமண மண்டபத்திற்கே சென்று மாணவி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பாளையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருமணம் நிச்சயம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சென்னல்பட்டியை சேர்ந்தவர் இசக்கி (வயது23). இவர் பாளையில் ஒரு கியாஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பாளை பர்கிட்மா நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் பாளை சாந்திநகர் மணிக்கூண்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில்  திங்களன்று  காலை நடப்பதாக இருந்தது.இதற்காக இரு வீட்டாரும் அழைப்பிதழ்கள் கொடுத்து உறவினர்களை வரவழைத்திருந்தனர்.

உள்ளே நுழைந்த போலீசார்

திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த வேளையில் திடீரென பாளை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் அந்த மண்டபத்துக்குள் நுழைந்தனர். மணப்பெண்ணுக்கு திருமண வயது எட்டவில்லை என தங்களுக்கு புகார் வந்துள்ளதாக  கூறினர்.

தடுத்து நிறுத்தினர்

இதையடுத்து மணப்பெண்ணின் வயது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அப்போது பெண்ணுக்கு 17 வயதே நிரம்பி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சமூக நல அதிகாரிகள் மற்றும் குழந்தை நல அதிகாரிகளும் வந்து திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக இருவீட்டாரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

காதல் விவகாரம்

மணப்பெண் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். அவரை அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் காதலித்ததாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து தங்கள் மகள் அந்த வாலிபருடன் சென்று விடுவாள் என நினைத்து தடபுடலாக திருமண ஏற்பாடுகள் செய்தனர். இதற்காக அவளை பிளஸ்-2 தேர்வு எழுதவும் அனுமதிக்கவில்லை.இந்த அவசர திருமணத்திற்கான ஏற்பாட்டின் போது மணமகளுக்கு திருமண வயது எட்டவில்லை என்பதை  கவனிக்கவில்லை. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சினிமா பாணியில்

இதைத் தொடர்ந்து மணப்பெண் சமூக நல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட பாணியில் திருமண மண்டபத்திற்கே சென்று மாணவி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பாளையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago