முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு, பேனா வழங்கும் விழா

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      திருநெல்வேலி
Image Unavailable

சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் மதிமுக மாவட்ட இளைஞரணி சார்பில் மதிமுக 24வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு, பேனா வழங்கும் விழா நடைபெற்றது. 

 மதிமுக துவக்க விழா

 விழாவிற்கு நெல்லை புறநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முருகன் தலைமை வகித்தார்.  மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் சசிக்குமார், மாவட்ட பிரதிநிதி வேலுப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மேலநீலிதநல்லூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பொன்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். 

நோட்டு புத்தகம் வழங்கல்

நெல்லை புறநகர் மதிமுக மாவட்ட செயலாளர் தி.மு.இராஜேந்திரன், மாநில பேச்சாளர் மணிவேந்தன் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு, பேனாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.  விழாவில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன், நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, துணை செயலாளர் ராஜமாணிக்கம், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் மோகன்தாஸ், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் சசிமுருகன், நிர்வாகிகள் ஜலாலுதீன், நயினார் முகம்மது, மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago