முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு ஒன்பதாவது அகில இந்திய ஹாக்கி போட்டி: 4 அமைச்சர்கள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில்; இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறையின் செயற்கை புல்வெளி மைதானத்தில் சிறப்பாகத்  தொடங்கி  நடைபெற்று வருகிறது.

 அமைச்சர்கள் பங்கேற்பு

 நேற்று நடைபெற்ற முதல் போட்டியை தமிழகத்தின் அமைச்சர்களான கே.ஏ.செங்கோட்டையன், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை கே.டி.இராஜேந்திர பாலாஜி, பால்வளத் துறை     கடம்பூர் செ.ராஜூ, செய்தி மற்றும் விளம்பரத்துறை வி.எம்.ராஜலட்சுமி, ஆதி திராவிட நலத்துறை ஆகியோர் துவக்கி வைத்து சிறந்த ஆட்டநாயகன் விருதினை வழங்கினர். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜிலா சத்யானந்த், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர்    சி.த. செல்லபாண்டியன,; பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஒரிசா அணி வெற்றி

போட்டியின் 3 வது நாளான நேற்று மாலை 5.00 மணியளவில் நடந்த போட்டியில்  ஒரிசா கிழக்கு கடற்கரை இரயில்வே                அணியும் ஐ.ஓ.பி., சென்னை அணியும்;; மோதியது.                இதில் 2 : 1 என்ற கோல் கணக்கில் ஒரிசா கிழக்கு கடற்கரை  இரயில்வே  அணி வெற்றிப் பெற்றது. 31-வது நிமிடத்தில் ஒரிசா கிழக்கு கடற்கரை இரயில்வே         அணி வீரர் சுரேஷ் டொப்போ ஒரு பீல்டு கோல் போட்டார்.  55-வது நிமிடத்தில் ஒரிசா கிழக்கு கடற்கரை ரயில்வே                அணி வீரர் உபெந்தராமஜ்கி ஒரு பீல்டு கோல் போட்டார். 61-வது நிமிடத்தில் சென்னை ஐ.ஓ.பி. அணி வீரர் முத்துச்செல்வம் பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.  திருமல்கியாத் சிங் மற்றும்  திரஜ்வா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.     மாலை 6.30 மணியளவில் நடந்த போட்டியில் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடெமி; கோவில்பட்டி அணியுடன் ஹாக்கி புதுச்சேரி; அணி மோதியது இதில் 1 : 1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலைப் பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்