முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10.12ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மீனவ சமுதாய மாணவி்களுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்.

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மீன்வளத்துறை சார்பாக 2015-16ஆம் ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழினை கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,, வழங்கினார்.

 முதல் மூன்று இடம்

 2015-16ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த செல்வன்.எஸ்.சதீஷ்குமார் த/பெ.சாமித்துரை, செல்வி.எஸ்.புஷ்பா த/பெ.சரவணன் ஆகியோர் முதல் இடத்தையும், செல்வன்.க.குமரேசன் த/பெ.கதிர்வேல், செல்வி.சரண்யா த/பெ.கோவிந்தராஜ் ஆகியோர் இரண்டாம் இடத்தையும், செல்வன்.எம்.ஸ்ரீநாத் த/பெ.முருகன், செல்வி.அஸ்வினி த/பெ.வடிவேலு மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த செல்வன்.சபரீஷ் த/பெ.சங்கர், செல்வி.சந்தியா த/பெ.சேகர் ஆகியோர் முதல் இடத்தையும், செல்வன்.அரவிந்தன் த/பெ.ரமேஷ், செல்வி.உமா த/பெ.ஆறுமுகம் ஆகியோர் இரண்டாம் இடத்தையும், செல்வன்.மருதுபாண்டியன் த/பெ.அய்யம்பெருமாள், செல்வி.கவிதா த/பெ.குப்பன் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஊக்கத்தொகை

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ரூ.24,000- ஊக்கத்தொகைக்கான காசோலையினையும், பத்தாம வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ரூ.12,000ஃ- ஊக்கத்தொகைக்கான காசோலையினையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழினையும் கலெக்டர் .இல.சுப்பிரமணியன்,,  வழங்கினார்.இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிமேகலை, மீன்வளத்துறை ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்