மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      கடலூர்
cud gdp 2017 05 08

கடலூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்ப்பு அரங்கத்தில் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்  கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் நடைபெற்றது.

 மனு பெற்ற கலெக்டர்

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு கலெக்டர்  நேரில் சென்று மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்றார்.

அறிவுரை

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 350 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

பாராட்டு  

மேலும், கலெக்டர்  திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியில் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாமிடம் பெற்ற கடலூர் ஒயாசிஸ் பள்ளியில் பயிலும் செல்வி ஏ.அனிதாவிற்கு சான்றிதழையும், ரூ.2000-ற்கான ரொக்கப்பரிசினையும் வழங்கி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இக்குறைகேட்புக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு) கணேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதிவாணன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: