முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த சோலார் விளக்குகள் விவசாயிகளுக்கு வினியோகம்

புதன்கிழமை, 10 மே 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள கிராமப்புறங்களில் தக்காளி,கத்திரிக்காய்,வெண்டைக்காய் காய்கறிகள் சாகுபடி அதிகம் நடைபெறுகிறது.பொதுவாக காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு புழு மற்றும் பூச்சிகளின் தொல்லை அதிமாக இருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்துகள் அடிப்பதால் விளையும் காய்கறிகளில் விசத்தன்மை ஏற்படுகிறது.இதனால் ரசாயண மருந்துகள் தெளிக்கப்பட்ட காய்கறிகளே சந்தைக்கு அதிகம் வருகிறது.இந்நிலையில் காய்கறி செடிகளை தாக்கும் பூச்சி மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை மூலம் நவீன சோலார் விளக்குகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் மூலம் சுற்றுப்புற சூழல் சார்ந்த பூச்சி வேளாண்மை செயல்படுத்தபட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.5200 மதிப்புள்ள சோலார் விளக்குகள்,இனக்கவர்ச்சி பொறி,பூச்சிகளை கவரும் மஞ்சள் அட்டைகள் போன்ற பொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.சோலார் விளக்குகளை விவசாய நிலத்தில் பொருத்துவது மூலம் காய்கறிகளில் உருவாகும் பூச்சி மற்றும் புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.இதேபோல் இனக்கவர்ச்சி அட்டைகள் செடியை தாக்கும் புழுக்களின் பெண் புழுவின் கார்மோன்கள் வைக்கப்பட்டு,ஆண் புழுக்களை கவர்ந்து இழுத்து கொல்லப்படுகிறது.மஞ்சள் அட்டைகள் மூலம் செடிகளின் மேலே பறக்கும் சின்ன சின்ன பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும்.இந்த உபகரணங்களை விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயன் படுத்துவதன் மூலம் புழு,பூச்சிகளுக்காக மருந்துகள் தனியாக தெளிக்க தேவைஇல்லை என்றும் விவசாயிகளுக்கு செலவு கணிசமாக குறையும் என்று தோட்டக்கலை அதிகாரிகள் கூறினர். ஆண்டிபட்டி தாலுகாவில் குன்னுர்,சித்தார்பட்டி,தெப்பம்பட்டி கிராமங்களில் நடைபெற்ற முகாம் முதற்கட்டமாக 200விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து சோலார் விளக்குகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்