முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடியில் சித்திரை திருவிழா கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்

புதன்கிழமை, 10 மே 2017      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி -  தமிழ் மாதம் சித்திரையில் வருடந்தோரும் கொண்டாடப்படும் திருவிழா தான் சித்திரை திருவிழா.பரமக்குடியில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை 24ம் தேதி(07.05.2017) நடைபெறும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.  சித்திரை 27ம் நாள் (10.5.2017)  அதிகாலை 3.00 மணியளவில் வைகறையில் அமைந்துள்ள சுந்தராஜபெருமாள் கோவிலிருந்து கள்ளழகர்  வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி பால்சோறு உண்டு இறங்கினார்.   பின்னர் தல்லாகுளத்தில் சென்றார்  ஒவ்வோரு மண்டகப்படியாக சென்று காட்டுபரமக்குடி மண்டகப்படிக்கு சென்று பின்பு காக்காதோப்பு வந்தடைந்தார்
 காலைமுதல் பக்தர்கள் ஆட்டுதோள் மூலம் மஞ்சள் கலந்த நீரை கள்ளழகர் மீது பீச்சி தங்களது நேத்திகடனை செலுத்துவார்கள்.சித்திரை 28 ம் நாள் (11.05.2017) வைகை ஆற்று பகுதியில் வாணிகர்மண்டகப்படியாக  தசாவாதாரம் நிகழ்ச்சி நடைபெறும்.சித்திரை 31 ம் நாள் (14.05.2017) சுந்தராஜபெருமாள் சன்னதிக்கு சென்றடைவார்.இத்திருவிழாவை கான சுற்றுவட்டாரதிலிருந்து லட்ச கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.திருவிழா  பாதுகாப்புக்காக ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தபட்டனர். இத்திருவிழா ஏற்பாட்டினை சுந்தராஜப் பெருமாள் தேவஸ்தான கமிட்டி செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்