முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழாவில் பட்டிமன்றம்

புதன்கிழமை, 10 மே 2017      மதுரை
Image Unavailable

   மதுரை.-அரிமழம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா 6ஆம் மண்டகப் படியன்று சிவன்கோவில் திடலில் நகரத்தார்கள் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் நடுவராகக் கொண்டு “அன்பிற் சிறந்தவர்கள்” வளர்ந்த தலைமுறையே! என்ற தலைப்பில் கவிஞர் கோ, சிந்தனையாளர் பொன்.மனோகரன் வாதிட்டனர். வளரும் தலைமுறையே! என்ற தலைப்பில் சென்னை நதியா, அறந்தாங்கி கௌசல்யா வாதிட்டனர். குடும்ப பாசம், கூட்டுக்குடும்பம், தனிக் குடும்பம், விட்டுக் கொடுத்தல், தர்ம சிந்தனை என இந்த ஐந்து கருத்தினை முன் வைத்துப் பேசினர். நடுவர் தனது நிறைவுரையில் அன்பை விதைத்தால் அமைதியே விளையும். மனிதகுலம் தோன்றிய நாள் முதல் - பகை, வெறுப்பு, பழிவாங்கல் என பல நிலைகள் உள்ளன. இதற்கெல்லாம் வடிகால்தான் இறை நம்பிக்கை. அரிவாள் சாதிக்காததை நாம் அறிவால் சாதித்திட முடியும் என்பதை உணர்த்துவதே அன்பிற் சிறந்த நிலை என்றார். வளரும் தலைமுறையின் பேராற்றல் பாராட்டுக்குரியது. அவர்களது கொடையுள்ளம் மிகுந்த நம்பிக்கை தருகிறது. ஆனால் வளர்ந்த தலைமுறையோ எந்த நிலையிலும் தன் பிள்ளைகளையும், மனிதகுல மேன்மையையும் கருத்தில் கொண்டு தங்கள் சிரமத்தினையும் பொருத்துக்கொண்டு அன்பிற் சிறந்தவர்களாக வழிகாட்டுகின்றனர் எனக் கூறினார். அரிமழம் நகரத்தார் ஏற்பாடு செய்த இந்நிகழ்வினை எம்.எஸ்.எம்.சோமு மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்