பொன்னேரி வட்டம் நாலூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்டமுகாம் : மாவட்ட ஆட்சியர் குறை கேட்பு

புதன்கிழமை, 10 மே 2017      சென்னை
Ponneri 2017 05 10

பொன்னேரி வட்டம், நாலூர் ஊராட்சிகுட்பட்ட நாலூர்-1 கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைப்பெற்றது. திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கலந்துக் கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முன்னாள் நாலூர் ஊராட்சிமன்றத்தலைவர் முத்துகுமார் வரவேற்றார்.

 குறைகேட்பு

சமூகப்பாதுகாப்புத் துறை சார்பில் குழந்தை திருமண தடைச்சட்டம்,பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கச் சட்டம்,குழந்தை கடத்தல்,குழந்தை உரிமைகள் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க முகாமிடப்பட்டது.நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை,மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஏடிஸ் கொசுக்களை ஒழித்து டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமையில் விழிப்புணர்வு முகாமிடப்பட்டது.மாவட்ட சமூக நல அலுவலகத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் முகாமிடப்பட்டது.வேளாண்மைத்துறை சார்பில் மண்பரிசோதனை,பயிர் வளர்ப்பு குறித்த செய்முறை பயிற்சிகள் முகாமிட்டு அளிக்கப்பட்டன.தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் முகாம் நடைப்பெற்றது.

 ஊரக வளர்சித் துறை சார்பில் தனி நபர் கழிப்பிடம் கட்டுவது பற்றி தகவல்கள் அளிக்கப்பட்டது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட உதவிகள் குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டது.மருத்துவ துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.165 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நல திட்டங்களுக்கான நலச்சலுகைகள் மற்றும் சான்றுகளை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி,பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன்,பொன்னேரி சாராட்சியர் தண்டபாணி ஆகியோர் வழங்கினர்.

 உடன் பொன்னேரி வட்டாட்சியர் ஐவண்ணன்,தனி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன்,மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன்,கார்த்திகேயன் கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் பொன்னுதுரை,பானுபிரசாத்,வெற்றிவேல் ராமலிங்கம்,ஆறுமுகம்,கொண்டக்கரை அமிர்தலிங்கம்,காணியம்பாக்கம் சம்பத்,மீஞ்சூர் தமிழரசன்,நாப்பாளையம் காமராஜ்,மெரட்டூர் திருமுருகன்,கடப்பாக்கம் ராஜா,ரோஜாராஜா,பழவை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: